
சென்னை:
2024 நாடாளுமன்றத் தேர்தலில் வாக்காளர் பட்டியல் மோசடி குறித்த பொதுநல மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. வெங்கட சிவக்குமார் தாக்கல் செய்த மனுவில், எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி யின் போலி வாக்காளர் குற்றச்சாட்டுக்கு தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்காமல், மிரட்டல் நோட்டீஸ் அனுப்பியதாக கூறப்பட்டது. வாக்காளர் பட்டியல் தரவுகளை பி.டி.எஃப். வடி வில் பொதுமக்களுக்கு வெளியிட வேண்டும் என்று கோரப் பட்டது. தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவத்சவா, நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் “உச்ச நீதிமன்றத்தில் ஒத்த வழக்கு நிலுவையில் உள்ளது” எனக் கூறி, ரூபாய் ஒரு லட்சம் அபராதம் விதித்து மனுவை தள்ளுபடி செய்தனர்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?