வாசகர் கடிதம் (உஷா முத்துராமன்) 04.10.25

வாசகர் கடிதம் (உஷா முத்துராமன்) 04.10.25


அன்புடையீர் 


வணக்கம். 4.10. 25 அன்றைய தமிழ்நாடு இ பேப்பரின் முதல் பக்கத்தில் ராமநாதபுரத்தில் ரூபாய் 176 கோடி முடிவற்ற பணிகளை திறந்து வைத்தார் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் என்ற படமும் செய்தியும் மிக அருமை. பாராட்டுக்கள். இன்றைய பஞ்சாங்கம் மிக அற்புத நாளாக அமைய எனக்கு உதவியது.


திருக்குறளை மிகத் தெளிவான பொருளுடன் படித்து மகிழ்ந்தேன். குலசை கடற்கரையில் தசரா திருவிழா காட்சிகள் படமும் செய்தியும் மிகவும் அருமை பாராட்டுக்கள்.


நலம் தரும் மருத்துவம் பகுதியில் தினமும் காலையில் எழுந்ததும் ஒரு டம்ளர் தண்ணீர் போதும் எடை குறைந்து நம் வதனம் பளபளக்கும் என்று செய்தி எளிய முறையில் ஆரோக்கியமாக வாழ உதவியது மனம் நிறைந்த பாராட்டுக்கள்.


சிறப்பு கண்காணிப்பு குழுக்களை அமைத்து உர விற்பனை செய்து நிலையங்களில் திடீர் ஆய்வு நடத்துங்கள் என்று அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பித்தது மிகவும் நல்ல தகவல்..


தினம் ஒரு தலைவர்கள் பகுதியில் சரத் சந்திர போஸ் வரலாறு மிகவும் அருமை அவருடைய கருப்பு வெள்ளை படத்துடன் தகவலை படிக்கும் போது மகிழ்ச்சியாக இருந்தது. பாராட்டுக்கள்.   


துர்கா பூஜா என்று ஒரு பக்கம் முழுவதும் துர்க்கை அம்மன் படமும் மிக மகிழ்ச்சியுடன் பார்த்து ரசித்து பரவசப்பட வைத்தது.


பல்சுவைக் களஞ்சியம் பக்கத்தில் வந்த அனைத்து தகவல்களும் மிகவும் அருமை ஜோக்ஸ் ரசித்து சிரித்தேன்.


வாழ்வு தரும் ஆரோக்கியம் பகுதியில் வந்த எல்லா தகவலும் நாம் எப்படி இருந்தால் ஆரோக்கியமாக வாழலாம் என்ன சாப்பிட வேண்டும் என்று பல தகவல்களை மிக அருமையாக கொடுத்தது பாராட்டுக்கள்.


நவராத்திரி உற்சவத்தின் நிறைவாக வன்னி மர பார்வேட்டை உற்சவம் என்று மிக அருமையான படம் பார்க்கும்போது புல்லரித்தது. முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் 150 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் என்ற செய்தியும் நல்ல தகவலாக இருந்தது.


சுற்றுலா பக்கத்தில் வந்த எத்தினபுஜா மலைக்கு ஒரு சாகச பயணம் செல்வோமா என்ற செய்தியை படித்த உடனே நிச்சயம் இதுபோன்ற ஒரு சாகச பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்ற ஆவல் வந்தது.


திருச்சி விமான நிலையத்தில் புதிய வசதி திருச்சி எம்பி துரை வைகோ நேரில் ஆய்வு செய்தது மிகவும் அருமை. இதுபோன்ற நல்ல வசதிகள் செய்து கொடுக்கும் போது பயணிகளுக்கு மிக அற்புதமான பயணமாக அமைவது உறுதி.


தபால்தலையும் நூறு ரூபாய் நாணயம் வெளியிட்ட செய்தி மிகவும் அருமை பாராட்டுக்கள்.


கட்டாய விடுப்பில் அமெரிக்க அரசு ஊழியர்கள் இதனால் அமெரிக்காவின் அரசு நிர்வாகம் முடங்கியது என்ற செய்தி வெள்ளை மாளிகைக்கு நுழைந்து நேரில் பார்ப்பது போல ஒரு பிரமிப்பு ஏற்பட்டது.


20 பக்கங்களிலும் அருமையான செய்திகளை கொடுத்து அழகான விடியலை எங்களுக்கு தினம் தினம் உருவாக்கிக் கொடுக்கும் தமிழ்நாடு இ பேப்பரின் ஆசிரியர் குழுமத்திற்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.


நன்றி 

உஷா முத்துராமன்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%