அன்புடையீர்
வணக்கம். 6 .10. 25 அன்றைய தமிழ்நாடு இ பேப்பரில் முதல் பக்கத்தில் சிறப்பு புலனாய்வு குழு நெரிசல் ஏற்பட்ட இடத்தில் தீவிர ஆய்வு செய்வது மிகவும் சிறந்தது. இதனால் அங்கு நடந்த உண்மை புலப்படும் இன்றைய பஞ்சாங்கம் மிக அற்புத நாளாக அமைய எனக்கு உதவியது பாராட்டுக்கள்.
திருக்குறள் மிக அற்புதமான பொருளுடன் படிக்கும்போது மகிழ்ச்சியாக இருந்தது. பாராட்டுக்கள். புரட்டாசி மாதத்தில் மூன்றாவது சனிக்கிழமை முன்னிட்டு காட்பாடி ஸ்ரீ வரதராஜ பெருமாள் சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தது மிகவும் அருமையான காட்சியாக மெய்சிலிர்க்க வைத்தது.
நலம் தரும் மருத்துவம் பகுதியில் வறட்சியால் கண்களுக்கு தீர்வு என்று அருமையான தகவலை படித்தவுடன் ஆரோக்கியத்தின் பாதையாக உணர்ந்து மகிழ்ந்தேன்.
கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம் ஜனவரி மாதம் திறக்கப்படும் என்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் அறிவித்தது நல்ல செய்தி பாராட்டுக்கள்.
தினம் ஒரு தலைவர்கள் பகுதியில் கேளப்பன் நாயர் வரலாறும் அவருடைய புகைப்படம் மிகவும் அருமை வரலாற்றுச் செய்தி மிக அருமையாக தினம் ஒரு தலைவர்கள் என்ற தலைப்பில் கொடுப்பது பாராட்டப்பட வேண்டிய ஒரு விஷயம்.
பல் சுவை களஞ்சியம் மிகவும் அருமை அதில் வந்த மீம்ஸ் எனக்கு மகிழ்ச்சியை கொடுத்து சிரிக்க வைத்தது. விடுகதை விடைகளை கண்டுபிடித்து மகிழ்ந்தேன்.
பன்முகம் பக்கத்தில் வந்த மாலைக்கண் நோயை குணமாக்கும் செவ்வாழைப்பழம் என்று நல்ல தகவல்களாக இருந்ததால் ஆவலுடன் படிக்க முடிந்தது.
ஸ்ரீ கேசவர் மற்றும் ஸ்ரீ பெரியாழ்வார் பவித்ர உற்சவம் என்ற படங்களும் செய்தியும் மற்ற ஆன்மீக தகவல்களும் மிக அருமையாக இருந்தது ஆவலுடன் படித்தேன்.
சுற்றுலா பக்கத்தில் வந்த பருவ மழை காலத்தில் மழை ஏற்றம் செய்யும்போது கவனிக்க வேண்டிய செய்திகள் என்று பட்டியலிட்டது அவ்வாறு பயணம் மேற்கொள்பவர்களுக்கு மிகவும் பயனுள்ள தகவல் பாராட்டுக்கள்.
உயர் நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து தவெக தலைவர் விஜய் அவர்கள் பிரச்சார வாகனத்தை பறிமுதல் செய்யும் நடவடிக்கை தீவிரமாக நடக்கும் செய்தி படித்தவுடன் அதிர்ச்சியாக இருந்தது.
தூங்கும் வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் அடுத்த மாதம் இறுதியில் பயன்பாட்டுக்கு வரும் என்று அதிகாரிகள் சொன்ன தகவல் மிகவும் அருமை. இதனால் வயது முதிர்ந்தவர்கள் அதுபோன்ற சொகுசான வாகனத்தில் தூங்கிக் கொண்டே பயணம் செய்யலாம் என்று தோன்றியது.
நேபாளத்தில் கனமழை ஏற்பட்டதால் நிலச்சரிவு ஏற்பட்டது என்ற செய்தி அதிர்ச்சியாக இருந்தது உக்கிரன் மீது ரஷ்யா தாக்குதல் என்று போர் செய்தியையும் உலக தகவல்களையும் மிக அருமையாக புரிய வைத்த கடைசி பக்கம் பிரமாதம். பாராட்டுக்கள்.
திங்கட்கிழமை விடியலை தித்திக்கும் விடியலாக மலர வைத்த தமிழ்நாடு இ பேப்பர் ஆசிரியர் குழுமத்தின் அரிய பணிக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.
உஷா முத்துராமன்