அன்புடையீர்
வணக்கம். 17. 9. 25 அன்றைய தமிழ்நாடு இ பேப்பர் டாட் காம் முதல் பக்கத்தில் தமிழகத்தில் நான்கு புதிய தொழில் பேட்டைகள் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்த செய்தியும் படமும் கண் கொள்ளா காட்சியாக இருந்தது.
இன்றைய பஞ்சாங்கம் மிக அற்புத நாளாக அமைய எனக்கு உதவியது பாராட்டுக்கள்.
.திருக்குறளை அதன் பொருள் புரிந்து படிக்கும்போது இன்பமாக உள்ளது. தினமும் இன்பத்தை கொடுக்கும் தமிழ்நாடு பேப்பருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். டெல்டா மாவட்டங்களில் ஒரு கோடி பனை விதைகள் விதைக்கும் பணி மிகவும் நல்ல பணி பாராட்டுக்கள்.
மூச்சு இருக்கும் வரை நம்முடைய மூளை திறம்பட செயல்பட வேண்டும் என்று நல்ல டிப்ஸ்களை கொடுத்த நலம் தரும் மருத்துவம் பகுதிக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.
தமிழகத்திற்கு ஒரு லட்சத்து 54 ஆயிரம் தன் உரங்களை உடனே கொடுக்க வேண்டும் என்று நம்முடைய பாரத பிரதமர் மோடிஜி அவர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதியது மிகவும் நல்ல தகவல். கிடைத்தால் விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சி அடைவார்கள் .
தினம் ஒரு தலைவர்கள் பகுதியில் வந்த ஹாஜி முகம்மது மௌலானா சாகிப் வரலாறு மிகவும் அருமை அந்த பெரிய மாமனிதர் பற்றிய செய்தியும் படமும் மனதிற்கு சந்தோஷத்தை கொடுத்து படிக்க வைத்தது.
பசுவைக் களஞ்சியம் பக்கத்தில் வந்த மீம்ஸ் விடுகதை ஜோக்ஸ் 3 முக்கனி சுவையாக இனித்து ஆவலுடன் படிக்க வைத்தது பாராட்டுக்கள்.
புரட்டாசி மாதம் பிறந்து விட்டாலே பெருமாளுக்கு உகந்த மாதம் என்று அந்தப் புரட்டாசி மாத சனிக்கிமையில் நவ திருப்பதி கோயில்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்குவது மிகவும் அற்புதம்.இதனால் மக்கள் ஆனந்தமாக கடவுளை தரிசனம் செய்வார்கள்.
சுற்றுலா பக்கத்தில் வந்த. எத்தினபுஜா மலைக்கு ஒரு சாகச பயணம் என்ற செய்தி படிக்கும் போது பிரமிப்பாக இருந்தது.
பகுதி வாய்ந்த ஆசிரியர்களை அரசு பாதுகாக்கும் அமைச்சர் அன்பில் மகேசன் உறுதி செய்தது மிகவும் நல்ல தகவல். பாராட்டுக்கள் .தெருநாய்களுக்கு மைக்ரோ சிப் பொருத்தி சென்னை மாவட்ட மாநகராட்சி நடவடிக்கை எடுத்தது அந்த நாய்களிடமிருந்து மக்களை பாதுகாக்கத் தான் என்று புரிந்தது.
குறை பிரசவங்களை குறைக்க வழங்கப்படும் சிகிச்சைகளின் பலன்கள் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆராய் செய்தது மிகவும் சிறந்தது. இதனால் குறை பிரசவங்கள் குறைந்து மக்கள் நலமுடன் வாழ்வார்கள். 100 நாள் வேலை திட்டத்திற்கு நிதி விடுப்பு எம் பி யின் கடிதத்திற்கு ஒன்றிய அமைச்சர் பதில் சொன்னது நல்ல தகவல் பாராட்டுக்கள்.
எமன் மீது இஸ்ரேல் அதிரடி தாக்குதல் அரபு நாடுகள் அவசர ஆலோசனை இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுக்க முடிவு என்ற வெளிநாட்டு செய்திகளின் மிகத் தெளிவாக சொன்னது மிகவும் பாராட்டுக்குரியது.
புதன்கிழமை விடியலை புத்துணர்வுடன் தொடங்க நல்ல செய்திகளை அலை பேசியில் விடியலில் கொடுக்கும் தமிழ்நாடு இ பேப்பரின் ஆசிரியர் குழுமத்திற்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.
நன்றி
உஷா முத்துராமன்