
கூட்டுக் குடும்பமாய் வாழும் எங்கள் வீட்டில் மொத்தம் நாங்கள் ஆறு பேர்கள். இதில்
நான்கு பேர்கள் தமிழ் நாடு இ பேப்பர் டாட் காம் வாசகர்கள்.
இப்போது எங்கள் இந்த நால்வருக்கும்
எழுதப்படாத ஒரு ஒப்பந்தம்...
அதாவது, ஒருவர் செய்திகள் அடுத்தவர்
ஆன்மீக சம்பந்தப்பட்ட விஷயங்கள் , அடுத்தவர் இலக்கியம்
மற்றவர் பொதுவான விஷயங்கள்... என்று
அவரவர் டேஸ்ட்க்கு தகுந்த படி இ பேப்பரை
வாசிக்க வேண்டும்.
இரவு சாப்பிடும் போது
அவரவர் படித்து அறிந்ததை -- உணர்ந்ததை அனைவரிடமும் மனம் விட்டு பகிர்ந்து மகிழ வேண்டும்.
இந்த நடைமுறையை நேற்றில் இருந்து எங்கள் வீட்டில் செயல் பாட்டுக்கு கொண்டு வந்துள்ளோம்.
முதல் நாளன்று ( அதாவது நேற்று)
தமிழ் நாடு இ பேப்பர் டாட் காம் பற்றிய அலசல் உரையாடல்,
சுமார் ஒரு மணி நேரம்
உணவருந்திய படியே
ஓடியது. எங்கள் ஆறு பேரில் பேப்பர் படிக்க நேரம் இல்லாத மற்ற
இருவருக்கும் ( என் தாய், என் கல்லூரி மகன்) இந்த கலந்துரையாடல் கூடுதல் பயனுள்ளதாக இருக்கிறது.
இதை எப்படி தெரிந்து கொண்டோம் என்றால், பேப்பரில் வெளியானவைகளை
பற்றி விரிவாக நாங்கள் பேசுவதை அந்த இரண்டு பேரும் காதுகளைத் தீட்டிக் கொண்டு கேட்கிற விதத்தைப் பார்த்து
அவர்களின் ஆர்வத்தை புரிந்து கொள்ள முடிகிறது.
இந்த அனுபவம் எங்கள் குடும்பத்திற்கு ஒரு வரப்பிரசாதம் என்று தான் சொல்ல வேண்டும். இத்தகைய அற்புதமான இதமான
இனிய உணர்வுகளுக்கு காரணமாக விளங்கும் தமிழ் நாடு இ பேப்பர் டாட் காம் பேப்பர் குழுமத்தின் அளப்பரிய இந்த
நற்சேவைக்கு எங்களின் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இன்னொன்று...
அருள் தரும் தெய்வம் இதழ் மாதமிருமுறை எங்கள் இல்லம் தேடி வந்து தரும் ஆனந்தம் இருக்கிறதே... அப்பப்பா... சொல்லி மகிழ வார்த்தை இல்லை.
தமிழ் நாடு இ பேப்பர் குழுமத்தின் உயரிய வளர்ச்சிக்காக எப்போதும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொண்டே இருக்கிறோம்.
வாழ்க நலமுடன்
வாழ்க வளமுடன்
பி.சிவசங்கர்
கோவை
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?