
மணிப்பூர் மீண்டும் அமைதி நிலைக்கு
திரும்ப வேண்டும் என மோடி
எதிர்பார்ப்பு. இளையராஜாவுக்கு
பாரத ரத்னா பட்டம் வழங்க வேண்டும்
என திரை துறையினர்
எதிர்பார்ப்பு. ஆன்மீக செய்திகள்
அனைத்தும் அற்புதமாக இருந்தது
நீரழிவு நோய்க்கு மூங்கில் அரிசி
மிகச் சிறந்த உணவாகும்.
செப்டம்பர் 16 முதல் தமிழகத்தில்
கன மழை பெய்யும். 106 டிகிரி
வெயில் தான் அடிக்கிறது
வானிலை அறிக்கை ஏறுக்கு
மாறாகத்தான் உள்ளது.
இதற்கு பருத்தி மூட்டை
குடோனிலேயே இருக்கலாம்.
தேர்தல் வந்தால் தான் பிரதமருக்கு
மணிப்பூர் நினைப்பு வரும்
என காங்கிரஸ் அறிக்கை.
வைத்தீஸ்வரன் கோவில்
கட்டுரை அற்புதமாக இருந்தது.
முத்து ஆனந்த அவர்களின் கவிதை
காதல் மழையில் நனைய வைத்தது
பீகாரில் 243 தொகுதிகளிலும்
வேட்பாளர்களைநிறுத்த போவதாக
நிதீஷ் குமார் அறிவிப்பு.
மணிப்பூரில் இரண்டு மணி நேரம்
மோடி தங்கி இருந்தது ஆச்சரியமான
விஷயமாகும். பெங்களூரில்
தியேட்டரில் உட்கார்ந்து கொண்டு
வேலை பார்த்த ஐடி ஊழியர்.
மிகவும் திறமைசாலியாக
இருப்பார் என நினைக்கிறேன்.
உக்ரைன்போரை நிறுத்த சீனாவுக்கு
100% வரி விதிப்பு. தென்னை மரத்தில்
தேள் கொட்டினால் பனை மரத்துக்கு
நெறிகெட்டுமாம். அந்தக் கதையாக
உள்ளது. பாலஸ்தீனத்தை
தனி நாடாக அறிவிக்க வேண்டும்.
அப்போ இதுவரை பாலஸ்தீனம்
தனி நாடாக இல்லையா.
சொல்லுங்க கோபால் சொல்லுங்க.
உங்கள் நாட்டில் தான் பின்லேடன்
கொல்லப் பட்டான் என இஸ்ரேல்
அறிக்கை. நாள்தோறும்
செய்திகள் அனைத்தும்
வியக்க வைக்கும் வகையில் உள்ளது
தன் நலம் கருதாத தமிழ்நாடு
இ பேப்பரை ஆதரிக்க வேண்டியது
வாசகர்களின் கடமையாகும்.
அயராது பாடுபடும் தமிழ்நாடு
இ பேப்பர் குடும்பத்திற்கு
நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்
நடேஷ் கன்னா
கல்லிடைக்குறிச்சி
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?