மருந்தென வேண்டா

மருந்தென வேண்டா


பசித்துப் புசித்தல்

பயனாகும்

பசிக்கா துண்ணல்

வீணாகும்!

இசைந்து புசித்தால்

இனிதாகும்

ஏக உணவு

நோயாகும்!


உண்ட உணவு

சீரணித்தால்

உடலுக்கு மருந்தே

வேண்டாவாம்!

கண்ட உணவு

உண்டாலோ

கசடே ஆகும்

வயிறன்றோ!


வயிறு காலி

ஆனபின்னே

வண்ண உணவை

உண்டிடலாம்!

நயன்மை உணவே

எப்போதும்

நல்ல முறையில்

கண்டிடலாம்!


அளவுக்கு மிஞ்சி

அமிழ்தமுமே

ஆமாம் நஞ்சாய்

மாறுமன்றோ!

அளவாய் உண்டு

எல்லோரும்

அகிலந் தன்னில்

வாழ்வோமே!


*முனைவர்*

*இராம.வேதநாயகம்*.

திருவண்ணாமலை.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%