வாசகர் கடிதம் (உஷா முத்துராமன்) 21.07.25

வாசகர் கடிதம் (உஷா முத்துராமன்) 21.07.25


 வணக்கம். 21. 7. 25 அன்றைய தமிழ்நாட்டி பேப்பர். காம் முதல் பக்கத்தில் இன்று நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்பு தொடக்கம் என்ற செய்தியை படித்ததும் டெல்லில் நடப்பது கண் முன்னே வந்தது .இன்றைய பஞ்சாங்கம் மிக அற்புத நாளாக எனக்கு தொடங்க பலவிதத்தில் உதவியது


திருக்குறள் மிகவும் அருமையான குறள் அதன் பொருளுடன் படிக்கும்போது மனம் மகிழ்ச்சியில் ஆழ்ந்தது. ஸ்ரீ பச்சையம்மன் அவதரித்த ஆடித் திங்கள் ஐந்தாம் நாள் மிக அருமையான படம் செய்தி பாராட்டுக்கள்.


நலம் தரும் மருத்துவம் பகுதியில் லிச்சி பழத்தை சாப்பிடுவதால் என்னென்ன பயன்கள் என்று படித்ததும் அப்பழத்தை எங்கு கிடைத்தாலும் வாங்கி சாப்பிட வேண்டுமென்ற ஒரு உணர்வு வந்தது சென்னையில் ஆயுதப்படை எஸ்ஐ மீது பயன்கள் தாக்குதல் அதிர்ச்சியான தகவல்.


நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலதிபர்கள் ஏமாற்றிய மோசடி மன்னன் கைது என்ற செய்தி நல்ல தகவல். இதனால் இனி யாரும் ஏமாற மாட்டார்கள். நாட்டின் பாதுகாப்பு தேவைக்காக லட்சத்தீவின் பிட்ரா தீவை கையகப்படுத்த மத்திய அரசு திட்டம் செய்தது நம் புதிய தகவலாக இருந்தது.


தினம் ஒரு தலைவர்கள் பகுதியில் கி.த. பச்சையப்பன் அவர்களின் வரலாறும் அரசியல் தகவலும் மிகவும் அருமை பாராட்டுக்கள்.


பல்சுவைக் களஞ்சியம் பக்கத்தில் வந்த உலகம் போற்றும் கணியன் பூங்குன்றனார் என்ற தகவல் மிகவும் அருமை. மீம்ஸ் விடுகதையும் என்னை மறந்து படிக்க வைத்தது. பன்முகம் பக்கத்தில் வந்த அனைத்து செய்தியும் பயனுள்ள தகவல் பாராட்டுக்கள்.


வந்தவாசியில் உள்ள ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவில் உள்ள ஸ்ரீ சிவசுப்பிரமணியருக்கு ஆடி மாத கிருத்திகை முன்னிட்டு விசேஷ பூஜைகள் என்ற படமும் தகவலும் மிகவும் அருமை. மற்ற அனைத்து செய்திகளும் அந்த பக்கத்தில் ஆர்வமுடன் படிக்க வைத்தது .


சுற்றுலா பக்கத்தில் வந்த வாழ்நாளில் மறக்க முடியாத தனித்து அனுபவம் வழங்கும் மலை ரயில் என்ற செய்தி மிகவும் அருமை. இதனால் மலை வாசஸ்தலமான நீலகிரி செல்லும் போது அருமையாக இருக்கும் என்று ஆவலுடன் படிக்க வைத்தது.


நாட்டிலேயே முதல்முறையாக டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி கும்பலில் ஒன்பது பேருக்கு ஆயுள் தண்டனை என்ற மேற்கு வங்க நீதிமன்றம் தீர்ப்பை படித்ததும் இது நல்ல தகவல் என்று மனம் வாழ்த்தியது.


ரயில்வே விற்பனையாளர்களுக்கு ஒரே மாதிரியான அடையாள அட்டைகள் வழங்குவதால் அவர்கள் நிச்சயம் ரயிலில் தான் பணிபுரிகிறார்கள் என்று ஒரு உறுதி ஏற்படும் இது ஒரு மிக அருமையான செய்தி பாராட்டுக்கள்.


காசாவில் பத்தில் ஒரு குழந்தைக்கு ஊட்டச் சத்து குறைபாடு என்பது வேதனையான செய்தி. அகதிகளுக்காக நிதி வெட்டு ஆபத்தை உருவாக்கும் என்று என்ற செய்தி அதிர்ச்சியாக இருந்தது .


எல்லா பக்கத்தையும் மிகவும் ரசித்து படிக்கும் படியான செய்திகளாகவும் புதுமையான தகவலாகவும் இருந்ததால் மனநிறைவுடன் இன்றைய தமிழ்நாட்டி பேப்பரை படித்து மகிழ்ந்தேன். தங்களின் இந்த பணிக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.


 நன்றி 

உஷா முத்துராமன்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%