வாசகர் கடிதம் (உஷா முத்துராமன்) 21.09.25

வாசகர் கடிதம் (உஷா முத்துராமன்) 21.09.25

அன்புடையீர் 


வணக்கம். 21.9 .25 அன்றைய தமிழ்நாடு இ பேப்பர் டாட் காம் முதல் பக்கத்தில் ஹெச் ஒன் பி விசா கட்டணம் ரூபாய் 88 லட்சம் என்று படித்தவுடன் அதிர்ச்சியான தகவலாக இருந்தது. இந்தியாவில் பலர் இந்த விசாவில் அமெரிக்கா சென்று இருப்பதை நினைத்தவுடன் அவர்களுக்கு என்ன நேர்மோ என்ற ஒரு பய உணர்வு வந்தது. இன்றைய பஞ்சாங்கம் மிக அருமையான தகவல் எனக்குச் சொன்னது மனம் நிறைந்த பாராட்டுக்கள்.


இன்றைய திருக்குறளை அதன் பொருளுடன் படித்து அருமையான திருக்குறள் படித்து மனம் நிறைய பாராட்டுடன் படித்தேன். 63 மாணவ மாணவியர்களுக்கு பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் கல்வி கடன் உதவி செய்தது மிக அருமையான தகவல் பாராட்டுக்கள்.


நலம் தரும் மருத்துவம் பகுதி மிகவும் அருமையான தகவல்களை சொல்கிறது இன்று பலருக்கும் தொப்பை இருந்து அவதிப்படுகிறார்கள் அந்த தொப்பைக்கு குட்பை சொல்ல சில நல்ல வழிகளை சொன்னது பாராட்டுக்குரியது.


மேற்கு வங்காளத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப்பனை அக்டோபர் ஆறில் தொடங்குகிறது என்று வடக்கே நடக்கும் அரசியலை மிக அழகாக சொன்னது பாராட்டுக்குரியது இண்டிகோ விமானத்திற்கு நடுவானில் வெடிகுண்டு மிரட்டல் என்ற செய்தி அதிர்ச்சியாக இருந்தது .


தினம் ஒரு தலைவர்கள் பகுதியில் பரலி சு. நெல்லையப்பர் அவர்களின் வரலாறும் அவருடைய புகைப்படமும் ஒரு சுதந்திர உணர்வுடன் படிக்க வைத்தது .


பல்சுவைக் களஞ்சியம் பகுதி வழக்கம் போல் கலகலவென்று இருந்தது. மீம்ஸும் விடுகதையும் என்னை ஆக்கிரமித்து அடுத்த பக்கத்திற்கு நகர்விடாமல் செய்து பலமுறை படிக்க வைத்தது பாராட்டுக்கள்.


ஜோதிடம் அறிவோம் பகுதி மிகவும் அருமை. அதில் உள்ள தகவல்களை படிக்கும்போது ஜோதிடத்தை நம்பாதவர்கள் கூட கண்டிப்பாக அதில் ஒரு உண்மையான வாக்கு உள்ளது என்று ஆர்வமுடன் படிக்க வைக்கும் நல்ல தகவல்களை சொல்லும் தங்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.


வழக்கம்போல் வண்ண படங்களுடனும் ஆன்மிக தகவல்களுடன் மின்னிய 16-ம் பக்கம் என்னை ஆர்வமுடன் படிக்க வைத்தது. அதில் வந்த கூழமந்தல் ஸ்ரீ பேசும் பெருமாள் கோவிலின் சிறப்பு தரிசனம் பார்த்ததும் புரட்டாசி சனிக்கிழமை பெருமாளை தரிசிக்கவில்லையே என்ற என்னுடைய ஏக்கத்தை தீர்த்து கோவிந்தா கோவிந்தா என்று நான் மன மகிழ்ச்சியுடன் கூறினேன்.  


சொல்லப்பட்ட ராசிபலன் மிகவும் அருமை இந்த வாரம் இப்படித்தான் இருக்கும் என்று தெரிந்து காவலுடன் படித்தேன்.

ஈ ஆதார் செயலி விரைவில் அறிமுகம் முகவரி பெயரை எளிதாக திருத்தி அமைக்கும் வசதி என்ற செய்தி இனித்தது இதனால் நாம் எங்கும் செல்லாது நம்மளுடைய அலைபேசியிலே இந்த மாற்றங்களை செய்து கொள்ளலாம் என்ற ஒரு நம்பிக்கை தரும் செய்தி பாராட்டுக்கள்.


இந்தியாவில் பலவீனமான பிரதமர் இருக்கிறார் என்ற எச்பி 1 வீசா விவகாரத்தில் அவரைப் பற்றிய ராகுல் காந்தி அவர்களின் பேச்சை படித்ததும் அரசியலை நன்றாக புரிந்து கொள்ள முடிந்தது.


இந்தியர்களுக்கு பேரிடி H 1 விசா கட்டணத்தை ஒரு லட்சம் டாலராக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அவர்கள் உயர்த்தி அறிவித்தது அதிர்ச்சியான தகவலாக படிக்க வைத்தது. அமெரிக்காவில் இந்திய இளைஞர் கொலை என்று வாஷிங்டனில் நடந்த செய்தியை படித்ததும் அதிர்ச்சியாக இருந்தது .


விடுமுறை எங்களுக்கு இல்லை என்று அருமையாக ஆர்வமுடனும் கடமை உணர்ச்சியுடன் பணியாற்றி நல்ல தகவல்களை கொடுக்கும் தமிழ்நாடு இ பேப்பரின் ஆசிரியர் குழுமத்திற்கு மனமார்ந்த பாராட்டுக்கள் 


நன்றி 

உஷா முத்துராமன்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%