அன்புடையீர்,
வணக்கம் 26/9/25 அன்றைய தமிழ்நாடு இ பேப்பரின் முதல் பக்கத்தில் கல்வியில் எழுச்சி பெற்ற தமிழகம் என்ற வார்த்தையே இனிமையாக இருந்தது. இன்றைய பஞ்சாங்கம் மிக அற்புதமான நாளாக எனக்கு அமைந்து உதவியது பாராட்டுக்கள்.
திருக்குறளை அதன் பொருளுடன் படித்து மகிழ்ந்தேன்ர பாராட்டுக்கள் மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலூர் நவராத்திரி திருவிழா என்ற படங்களை பார்த்தவுடன் உடலும் உள்ளமும் புல்லரித்தது. அருமையான ஆன்மிக தகவல்களை கொடுக்கும் தங்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.
த. வெ.க தலைவர் நடிகர் விஜய் அவர்களின் வெறுப்பு அரசியலில் எடுபடாது என்ற தொல் திருமாவளவன் அவர்களின் கருத்தை படித்ததும் அரசியலை நன்றாக புரிந்து கொள்ள முடிந்தது தமிழகத்திலும் கோவையிலும் நீலகிரியிலும் மூன்று நாட்களுக்கு கன மழை பெய்யும் என்ற செய்தி சந்தோஷமாக இருந்தது.
நடிகர் விஜய் அவர்கள் கூட்டத்தை கூட்டி விட்டார் என்பதற்காக அரசியலில் நிலைத்து விட முடியாது என்ற ஆர்எஸ் பாரதி அவர்களின் கருத்தும் அரசியலை நன்றாக புரிந்து கொள்ள முடிந்தது. தங்கத்தின் விலை 85 ஆயிரத்தை கடந்தது என்று செய்த அதிர்ச்சியாக இருந்தது.
தினம் ஒரு தலைவர்கள் பகுதியில் வந்த மூவலூர் ராமாமிர்தம் அவர்களின் வரலாறும் அவரைப் பற்றிய சரித்திர தகவலும் மிகவும் அருமை. சத்துள்ள நல்ல தலைவர்களை பற்றி அழகாக தினமும் சித்தரித்து நல்ல செய்திகளை கொடுக்கும் தங்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.
பல்சுவை களஞ்சியம் பகுதியில் கண்டுகொள்ள படாமல் விட்ட கதாபாத்திரங்கள் என்று புராண தகவல்களை மிக அருமையாக சொன்னது பாராட்டுக்கள். விடுகதை மிகவும் அருமையாக இருந்தது எளிதாக விடையை கண்டுபிடித்து மகிழ்ந்தேன்.
தெய்வீக அருள் தரும் ஆன்மிகம் என்ற பகுதியில் நவராத்திரியில் விரதம் இருந்து தேவியின் ஆசிகளை பெற கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளை சொன்னது மிகவும் அருமை. இதனால் தேவி நல் கண்டிப்பாக கிடைக்கும் என்ற ஒரு சந்தோஷம் வந்தது.
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகம் என்று அரசியல் செய்திகளையும் ஸ்ரீ அதிவராஹர் நவராத்திரி உற்சவ விசேஷ அலங்காரம் என்று ஆன்மிக தகவல்களும் கலந்து நல்ல செய்திகளாக கொடுக்கும் தங்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.
சுற்றுலா பக்கத்தில் புராணக் கதையான ராமாயணத்தில் கூறப்பட்டுள்ள ஐந்து இடங்களை சுற்றிகள் பார்க்கலாம் என்று பட்டியலிட்டு சொன்னது மிகவும் அருமை.
தொழில்நுட்ப அறிவியல் செய்திகள் என்று சைக்கிள் ஓட்டுங்கள் மறதியை வெல்லுங்கள் என்று நல்ல எளிமையான பயிற்சியை பற்றி மிக அழகாக சொன்னது பாராட்டுக்குரியது.
ஆன்லைன் மூலம் வாக்காளர் பெயர் சேர்க்க அல்லது நீக்க ஆதார் லிங்க் போன் கட்டாயம் என்று தேர்தல் ஆணையம் சொல்லி இருப்பது இன்றைய நடைமுறையை மிக அழகாக தெளிவாக சொன்னது.
காசா நிவாரண முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல் என்றும் அதனால் குழந்தைகள் உட்பட என்பது பேர் பலி என்ற செய்தியின் போரை பற்றி தெரிந்து கொண்டதால் வேதனையாக இருந்தது..
20 பக்கங்களிலும் அருமையான செய்திகளை அழகாக தெளிவாக தொகுத்து கொடுத்து வெள்ளிக்கிழமை விடியலை வெளிச்சம் என சந்தோஷமாக அனுபவிக்க உதவிய தமிழ்நாடு இ பேப்பர் ஆசிரியர் குழுமத்திற்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.
நன்றி
உஷா முத்துராமன்