வாசகர் கடிதம் (உஷா முத்துராமன்) 30.08.25

வாசகர் கடிதம் (உஷா முத்துராமன்) 30.08.25


அன்புடையீர் 


வணக்கம் 30. 8.25 அன்றைய தமிழ்நாடு இ பேப்பர்.காம் முதல் பக்கத்தில் ஜப்பானின் 6 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்க்க இந்தியாவுக்கு இலக்கு என்ற செய்தி மிகவும் அருமையான தகவல் இன்றைய பஞ்சாங்கம் நல்ல நாளாக அமைய எனக்கு உதவியது மனம் நிறைந்த பாராட்டுக்கள்


இன்றைய திருக்குறள் பொருளுடன் படித்து மகிழ்ந்தேன் மிக்க நன்றி. எலி வாகனம் அன்ன வாகனம் ஸ்ரீ ஞான கணபதி சிறப்பு வழிபாடு என்று கோயம்புத்தூரில் நடந்த அந்த செய்தி மிகவும் அருமையான தகவல் மனமார்ந்த பாராட்டுக்கள்.


ஆரோக்கியமாக வாழ யாருக்குத்தான் ஆசை இருக்காது அப்படி ஆரோக்கியமாக வாழ ஆசை இருக்காது. இதை பின்பற்றுங்கள் என்று நல்ல தகவல்களை நலம் தரும் மருத்துவம் பகுதியில் படித்து மகிழ்ந்தேன் மிக அருமையான தகவல்.


 பாராட்டுக்கள்.காத்திருப்போர் பட்டியல் அதிகரிப்பதால் முக்கிய ரயில்களில் கூடுதல் பெட்டிகளை இணைப்பது மிக மிக அருமை இதனால் பயணம் செய்பவர்களுக்கு எளிதாக பயண டிக்கெட் கிடைக்கும்.


தினம் ஒரு தலைவர்கள் பகுதியில் வந்த டி எஸ் துரைராஜ் அவர்களின் வரலாறும் கருப்பு வெள்ளை புகைப்படம் மிகவும் அருமை வரலாற்றுச் செய்தி படித்து அகம் மகிழ்ந்தேன்.


பல்சுவை கலைஞர் வந்த புதினா கீரையின் அற்புதங்கள் படித்தபோது அதன் வாசனை மிகவும் பிடிக்குமே என்று ஆவலுடன் அதை தினமும் சாப்பிட தீர்மானித்தேன். ஜோக்ஸ் மிகவும் அருமை மனமார்ந்த பாராட்டுக்கள்.


வவுத்திரம் ஆரோக்கியம் பக்கத்தில் வந்த அனைத்து தகவல்களும் மிகவும் அருமை சர்க்கரைக்கு பதில் வெல்லம் பயன்படுத்தினால் கிடைக்கும் நன்மைகள் என்று வெல்லத்தைப் பற்றிய அருமையான தகவலை சொன்னது பாராட்டுக்குரியது.


விநாயக திருவீதி உலா என்ற செய்தியும் ஸ்ரீகன்யகா பரமேஸ்வரி அம்மன் அலங்காரத்தில் சிறப்பு வழிபாடு என்றும் நல்ல அருமையான தகவல்களை படங்களுடன் ஆன்மிக செய்திகளாக ரசித்து மகிழ்ந்தேன் .


சுற்றுலா பக்கத்தில் வந்த அமைதியும் ஆன்மீகம் நிறைந்த அதிசய நாடு பூட்டான் என்ற செய்தி மிகவும் அருமையான தகவல் பாராட்டுக்கள்.


தீப்பெட்டிக்குள் அடங்கும் போன்கள் என்றும் வியக்க வைக்கும் அம்சங்கள் நிறைந்த அந்த புதிய அலை பேசி பற்றி படித்து ஆர்வமுடன் ரசித்தேன். சாலையோர வியாபாரிகளுக்கான கடன் திட்டம் 2030 ஆம் ஆண்டு வரை நீட்டிப்பு செய்தது மிகவும் அருமை பாராட்டுக்கள்.


பீகார் வாக்காளர் பட்டியலில் இருந்து 65 லட்சம் ஏழைகளின் பெயர்கள் நீக்கம் ராகுல் காந்தி அவர்கள் குற்றம் சாட்டியதை படித்தவுடன் அதிர்ச்சியாக இருந்தது. சண்டிகாரின் 50 கிலோமீட்டர் தொலைவிற்கு போக்குவரத்து நெரிசல். வாகன ஓட்டிகள் தவிப்பு என்ற செய்தியும் அங்கு நடக்கும் தகவல்களை மிக அருமையாக சொன்னது பாராட்டுக்கள்.


திடீர் மாயமாகும் உலகின் மிகப்பெரிய ஏரி என்று காற்றின் கடலுக்கு என்ன ஆச்சு என்ற பாகு என்ற இடத்தில் நடந்த செய்தி அதிர்ச்சியாக இருந்தது. ஸ்தம்பித்த ரஷ்யா பெட்ரோல் டீசலுக்கு பெரும் தட்டுப்பாடு. பல கிலோமீட்டர் காத்திருக்கும் வாகனங்கள் என்ற செய்தியும் அதிர்ச்சியாக இருந்தது.


20 பக்கத்திலும் அருமையான செய்திகளை கொடுத்து சனிக்கிழமை விடியலை சந்தோஷ விடியலாக அமைய உதவிய தமிழ்நாடு இ பேப்பரின் ஆசிரியர் குழுமத்திற்கு மனமார்ந்த பாராட்டுக்கள் 


நன்றி 

உஷா முத்துராமன்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%