
நல. ஞானபண்டிதனின் 'மனம் மாறிய மலர்' என்ற சிறுகதையில் பெற்ற பெண் பானுமதி திருமணம் ஆனவுடனேயே அடியோடு மாறிப்போனாலும், வீட்டுக்கு வந்த மாப்பிள்ளையாவது நல்ல மனிதனாக இருக்கிறாரே என்று கொஞ்சம் ஆறுதல் அடைவதை தவிர வேறுவழியில்லை. மனிதர்கள் எப்படியெல்லாம் மாறிவிடுகிறார்கள் என்பதற்கு இந்த கதை ஒரு உதாரணம்.
சோபனா விச்வநாதனின் 'ஆடி பிறந்தாச்சு' என்ற கட்டுரை ஆடி மாதத்தின் சிறப்புகளை அழகாக உணர்த்தியது. திருச்சூரின் பெயர் பெற்ற வடக்குந்நாத ஷேத்திரத்தில் ஆடி முதல்நாள் அன்று ஆனையூட்டு எனப்படும் யானைக்கு பிரசாத உணவு அளிக்கப்படுகிறது. அந்த விழாவில் சுமார் 50 யானைகள் பங்கு பெறும் என்ற தகவல் இதுவரை நான் கேள்விப்படாத வியப்பான தகவல்!
'வாழ்ந்தே தீருவோம்' என்ற ஹரணியின் தொடர்கதை மிகவும் அற்புதமான கதை. இந்த தொடர்கதையை வெளியிடும்போது, கொஞ்சம் வரிசை மாறி வந்து, மீண்டும் வெளிவந்த அத்தியாயங்களே திரும்ப வருவதை யாரும் கவனிக்க வில்லையென்று நினைக்கிறேன்.
தினம் ஒரு தலைவர்கள் வரிசையில் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் ஒவ்வொரு விதமாக இருப்பது மனிதர்களின் வாழ்க்கைதான் எத்தனை எத்தனை விநோதம் என்பதை உணர்த்துகிறது. காகா காலேல்கர் வாழ்க்கையை படித்தபோது அவரது சாதனைகளை படித்து மலைத்துப்போனேன். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றதற்காக பல முறை சிறை சென்றவர் மிகப்பெரிய எழுத்தாளராகவும் திகழ்ந்து, சாகித்ய அகாடமி விருதுவரை பெற்றிருப்பது நிச்சயம் பாராட்டவேண்டிய சாதனைதான்.
ஆசியாவிலேயே மிகப்பெரிய விநாயகரைப் பற்றிய சிவ. முத்து லட்சுமணனின் கட்டுரையை படித்தேன். அந்த மிகப்பெரிய விநாயகரின் எடை 190 டன் என்றும், 19 அடி 10 அங்குல உயரமென்றும் , 8 அடி சுற்றளவும் கொண்டவர் என்றும் ஏராளமான தகவல்களை அறிந்து வியந்தேன்.
தேனின் மருத்துவ குணங்கள் படித்தேன். இந்த கட்டுரையின் தகவல்கள் அன்றாட வாழ்க்கைகக்கு நிச்சயம் பயன்படும். அதுபோல ஆஸ்துமா ஏன் உண்டாகிறது? என்ற தகவலும் பிரச்சனை உள்ளவர்களுக்கு உதவும்வகையில் இருக்கிறது!
-சின்னஞ்சிறுகோபு,
சிகாகோ.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?