வாசகர் கடிதம் (பி.சிவசங்கர்) 03.10.25

வாசகர் கடிதம் (பி.சிவசங்கர்) 03.10.25



எனக்குப் பரிச்சயமான 

தமிழ் நாடு இ பேப்பர் குழுமத்தின் வாசக சொந்தங்கள் சிலரிடம் 

சர்வே கண்ணோட்டத்தில் 

அலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன்.


சர்வே பொருள்;


தமிழ் நாடு இ பேப்பரில் தங்களை மிகவும் கவர்ந்த அம்சம் எது?


நான் உரையாடிய வாசகர்களின் எண்ணிக்கை 14 .


முதலில் சர்வேயில் கிடைத்த சுவாரஸ்ய அம்சங்களைப் பற்றி பேசுவோம். அதற்குப் பிறகு சர்வே ரிசல்ட்டு க்கு வருவோம்.


14 வாசகர்களில் ஆண்கள்: 12.

பெண்கள்: 2


இங்கேயும் ஆணாதிக்கக் கொடுமையா?

என்று உங்களில் சிலர் 

ஜோவியலாக சிரித்து 

மனதுக்குள் கேட்பது புரிகிறது... புரிகிறது.


நிச்சயம் அப்படி இல்லை என்று சத்தியம் அடித்துச் சொல்கிறேன்.


எனக்கு சட்டென்று நினைவுக்கு வந்த தமிழ் நாடு இ பேப்பர் வாசகர்களை வேக வேகமாக பட்டியல் இட்டேன்.


14 வரை தடையின்றி 

பெயரை எழுத எழுத 

வந்தார்கள். அடுத்து என்று தலையில் கை வைத்து யோசிக்கும் தருணத்தில் 14 போதும் என்று எல்லை நிர்ணயித்து நிறுத்திக்

கொண்டேன் என்பது தான் நடந்த உண்மை 


இப்போது திரும்பவும் 

வாசகர் பெயர் பட்டியலை பிரத்தியட்ச பார்வையில் நோட்டம்

இட்டேன்.


முதலில் உணர்வுக்குப் பட்டது, அந்த 14 பேர்களின் மொபைல் நம்பரும் என் மொபைல் வசம் இருந்தது. ஆஹா...

பரவாயில்லையே...

ஆகச்சிறந்த முறையில் தான் பட்டியல் போட்டு அடுக்கி இருக்கிறேன் என்று எனக்கு நானே சபாஷ் போட்டுக் கொண்டு சந்தோஷித்துக் கொண்டேன்.


அடுத்த மகிழ்ச்சி என்ன தெரியுமா?


அந்த 14 பேர்களும் வெவ்வேறு மாவட்டம் சார்ந்தவர்களாக இருந்தது. என்ன ஆச்சரியம் பாருங்கள்.

இது இயல்பாக நடந்ததே தவிர, முன்

யோசனையுடன் திட்டமிட்டு நடந்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.


அடுத்து வந்த உணர்வு என்ன தெரியுமா?

மெல்லிய ஆதங்கத்துடன் மெல்லிய வருத்தம்.


அந்த 14 பேர் பட்டியலில் 12 பேர் ஆண்கள் 2 பேர் பெண்கள். இதுவும் திட்டம் எதுவும் இல்லாமல் இயல்பாக நடந்தது தான்.

ஆகவே ஆணாதிக்க சர்வே என்ற குற்றச்சாட்டிற்கு சுத்தமாக வழியில்லை.


அடுத்த மகிழ்வான விஷயம்...


நாம் தொடர்பு கொண்ட அந்த 14 வாசக சொந்தங்கள் அனைவரும், தமிழ் நாடு இ பேப்பர் குழுமத்தின் பேரில் அபரிமிதமான பிரியம் வைத்துள்ளனர் என்பதை எளிதாக புரிந்து கொண்டு பூரிக்க முடிந்தது.


தலைமை ஆசிரியர் அவர்கள் ஒரிஸ்ஸா வில் இருந்து கொண்டே இந்த ஒப்பற்ற பணியை 

அற்புதமாக ஆற்றி வருகிறார் என்பதை 

திரும்பத் திரும்ப சொல்லி தங்களின் 

அளவற்ற அன்பையும் நம்பிக்கையையும் வெளிப்படுத்தி என்னை ஆச்சரியப்பட வைத்தனர்.


அவர்களில் சிலர் ( நான்கு பேர்கள்)

தமிழ் நாடு இ பேப்பருக்கு சந்தா கட்டி படிக்கவும் தயார் என்று 

தங்களின் பெருந்தன்மையை தாராளமாக வெளிப்படுத்தினர்.

எனக்கு அது பெருமிதமாக இருந்தது.


அந்த 14 வாசக சொந்தங்களில் 9 பேர்கள் அருள் தரும் தெய்வம் இதழுக்கு சந்தாதாரர் என்பது சந்தோஷமான விஷயமாக எனக்குப் பட்டது.


சில வாசகர்கள் தங்கள் புகைப்படங்களை எனக்கு ஆர்வமுடன் 

( நான் கேட்காமலே)

அனுப்பி வைத்து தங்களின் ஆர்வப் பெருக்கை வெளிப் படுத்தி புருவம் உயர வைத்தனர்.


இந்தத் தனிப்பட்ட என் சர்வே சேகரிப்பு க்கு ஒத்துழைப்பு நல்கிய அந்த 14 வாசக சொந்தங்களுக்கும் அன்பான நன்றி...

நன்றி!


நாளை சர்வே முடிவு பற்றிய தகவல்களோடு சந்திப்போம்!



பி.சிவசங்கர்

கோவை

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%