அன்புடையீர்,
வணக்கம். 3.10 .25 அன்றைய தமிழ்நாடு இ பேப்பரில் முதல் பக்கத்தில் 5 ஆண்டுகளுக்குப் பின் இந்தியா சீனா இடையே நேரடி விமான சேவை என்பது சீனா செல்பவர்களுக்கு மிகவும் பயனுள்ள தகவல். தங்கம் விலை பவுன் 88000/- ஐ நெருங்கியது என்று அதிர்ச்சியான தகவலை படித்து வியந்தேன்.
திருக்குறளை அதன் பொருளுடன் படித்து அகம் மகிழ்ந்தேன். அதிமுக வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் என்று அரசியலை மிக அழகாக சொன்னது பாராட்டுக்குரியது .
இரவில் வைஃபை ரூட்டரை அணைக்காமல் தூங்கினால் என்னவெல்லாம் நிகழும் என்று நலம் தரும் மருத்துவம் பகுதியில் ஆரோக்கிய தகவலை சொன்னது மிகவும் அருமை பாராட்டுக்கள்.
நடிகர் விஜய் அவர்களின் பிரசாரம் அடுத்த இரண்டு வாரங்களுக்கு ரத்து என்று தவெக அறிவிப்பு செய்தது அவருடைய மனநிலையை படிக்க முடிந்தது .
இதெல்லாம் ஒரு தலைவர்கள் பகுதியில் அன்னி வூட் பெசண்ட் அவர்களின் வரலாறு புகைப்படமும் மனது ஆழமாக பதிய வைத்த தகவல் பாராட்டுக்கள்.
துர்கா பூஜா என்று எல்லா கோவில்களிலும் துர்க்கை அம்மனை அலங்காரத்தை பற்றியும் நவராத்திரியின் சிறப்பு பற்றியும் வண்ண படங்களாக கடவுள்கள் பார்க்கும் போது மனமும் மகிழ்ச்சி அடைந்தது.
பல்சுவை களஞ்சியம் பகுதி மிகவும் அருமை மீம்ஸ் பலமுறை பார்த்து சிரிக்க வைக்கிறது. விடுகதை மிக எளிமையாக இருந்ததால் விடைகளை கண்டுபிடிக்க முடிந்தது .
தெய்வீக அருள் தரும் ஆன்மீகம் என்ற பக்கத்தில் வந்த தீய சக்திகளை அழிக்கும் குலசை முத்தாரம்மன் என்ற செய்தி புதுமையான தகவலாக இருந்தது பாராட்டுக்கள்.
உலக முதியோர் தினம் என்ற படமும் செய்தியும் மிகவும் அருமை பாராட்டுக்கள். யாக பூஜை காந்தி சிலைக்கு மாலை என்று வண்ணப் படங்களுடன் பல தகவல்களை கொடுத்த பக்கம் மிகவும் அருமை பாராட்டுக்கள் .
சுற்றுலா பக்கத்தில் வந்த நீலகிரியில் வந்த புதிய போக்குவரத்து கட்டுப்பாடுகள் என்று பயணிகள் செல்வதற்கு தேவையான செய்தியை மிக அருமையாக தெளிவாக சொன்னது பாராட்டுக்கள்.
கிரைம் பக்கம் மிகவும் அருமை அதில் உள்ள செய்திகள் எல்லாம் படிக்கும்போது ஒரு விழிப்புணர்வு வருவது தான் உண்மை. தினம் தினம் நல்ல க்ரைம் கார்னரை கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் தங்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் .
டெல்லியில் நூற்றாண்டு நிறைவு விழாவில் அஞ்சல் தலை வெளியீடு என்ற செய்தி மிகவும் அருமை.டெல்லியில் நடப்பதை நேரில் சென்று பார்ப்பது போல ஒரு பெருமிதம் கிடைத்தது பாராட்டுக்கள்.
நோபல் பரிசு என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அவர்கள் மீண்டும் குமுறிய அந்த படமும் செய்தியும் அயல்நாட்டில் நடப்பதை மிக அழகாக தெளிவாக புரிந்தது. ட்ரம்ப் சந்தித்த பிறகு பகிரங்க மன்னிப்பு கேட்ட செய்தியும் அயல்நாட்டு நடப்பினை மிக அருமையாக காட்டியது பாராட்டுக்கள்.
அனைத்து பக்கங்களிலும் அருமையான செய்திகள் மிக அழகாகவும் தெளிவாகவும் சோர்வின்றியும் படிக்கும் உற்சாகத்தை ஏற்படுத்தும் தமிழ்நாடு இ பேப்பரின் ஆசிரியர் குழுமத்திற்கு மனமார்ந்த பாராட்டுக்கள்
நன்றி
உஷா முத்துராமன்