வாசகர் கடிதம் (பி.சிவசங்கர்) 06.10.25

வாசகர் கடிதம் (பி.சிவசங்கர்) 06.10.25

 


தமிழ் நாடு இ பேப்பர் குழுமத்தின் வாசக சொந்தங்கள் அனைவருக்கும் அன்பான வணக்கம்.


மதிப்பு மிக்க ஆசிரியர் குழுமத்தின் அற்புதமான பணியின் 

மகத்துவத்தை நினைக்கும் போதெல்லாம் நெஞ்சம் நெகிழ்கிறது.

மலர்கிறது.

இலக்கை அடைய வேண்டும் என்றால் 

இரவு பகல் பாராது 

எழுச்சி உணர்வோடு 

எதிர்வரும் தடைகளை யெல்லாம் தகர்த்தெறிந்து,

தளர்வோ, சோர்வோ இல்லாமல் உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற எதார்த்த வாழ்க்கைப் பாடம் உரத்த சிந்தனை வழி புரிகிறது. புது ரத்தம் பாய்கிறது.


என்னுள் ஆழ்ந்து தோய்ந்த இதே நல்லுணர்வு, நம் வாசக சொந்தம் தென்காசி வெங்கடாசலபதி அவர்களுக்கும் இதே கனத்தில் வெளிப்பட்டு வருவது, மிகுந்த ஆச்சரிய அனுபவம்...


எந்தவித எதிர்பார்ப்பும் இல்லா மன நிலையில் 

தமிழ் நாடு இ பேப்பர் குழுமத்தினை வழி நடத்தி, செயல் படுத்தி வருகின்ற சீப் எடிட்டர் அவர்களின் உள் உணர்வு ஓட்டத்தையும் இந்த தருணத்தில் நினைத்துப் பார்க்கிறேன்.


எல்லாம் வல்ல இறை ஆற்றல் துணையால் 

ஏதோவொரு இனந் தெரியாத ஒற்றுமை இணைப்பு, இழைந்தோடி இருப்பதை கூர்மைப் 

பார்வையில் கவனப் படுத்த முடிகிறது.


எதையும் ஆய்ந்து தெளிந்து, அடி எடுத்து வைக்கும் வல்லமை மிக்க நம் வாசக சொந்தங்கள் இந்த 

நுட்பமான எண்ண அலைகளின் அலைவரிசையை,

மிகச் சரியாக புரிந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு நிரம்ப உண்டு.


ஆகவே தான், கூறியது கூறல் பிழையாகாது என்று தெளிந்து, உயரிய நோக்கத்திற்காக திரும்பத் திரும்ப இந்த விஷயத்தில் அக்கறை செலுத்தி வருகிறேன்.


தமிழ் நாடு இ பேப்பர் குழுமத்தின் வெற்றியை தனிநபர் வெற்றியாக கருதி இருந்தால், இந்த மாதிரியான சிந்தனை களை நிச்சயம் முன் நிறுத்த மாட்டேன்.


சமூக வளர்ச்சிக்கு அடித்தளம் அமைக்கின்ற ஒரு கூட்டு முயற்சியாகவே

இந்த வெற்றியைப் பார்க்கும் ஒரே காரணத்திற்காகத் தான் வாசகர் கடிதம் பகுதியின் மூலமாக கண்ணுக்குத் தெரியாத இந்த கனமான -- வளமான 

மகசூலுக்காக மன்றாடுகிறேன்.


இலட்சிய இலக்கு கைக் கெட்டும் தூரத்தில் என்பது நிச்சயம் ஆகி விட்ட நிலையில், வாசக சொந்தங்கள் சற்று 

விரிந்த இதயத்துடன் விழித்தெழுந்து விட்டால் போதும்...

எட்ட வேண்டிய இலக்கை வெகு விரைவில் எட்டிப் பிடித்து விடலாம்.

நாம் வாழும் இந்த சமுதாயத்தோடு சேர்ந்து நாமும் தனித் தனியாக செழித்து 

வளம் பல காணலாம்.

வளம் என்று இங்கே நான் குறிப்பிடுவது 

பொருள் சம்பந்தப்பட்ட

சராசரி லெளகீக எல்லைகளைத் தாண்டிய விரிவுநிலை என்பதை தயவு செய்து நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று அன்புடன் வேண்டுகிறேன்.


இன்று குறிப்பாக படைப்பாளர் பக்கம் 

சற்று முனைப்புடன் கவனம் குவிக்க முயல்கிறேன்.


தமிழ் நாடு இ பேப்பர் குழுமத்தின் வெளியீடுகளில் பிரசுரமாகி வரும்,

கதை, கவிதை, கட்டுரை, இன்ன பிற படைப்புகள் கூடுதல் வெளிச்சம் கண்டு 

விசேஷ அந்தஸ்து பெற்று வரும் ஆரோக்கியமான சூழ்நிலை இங்கே 

மலர்ந்திருக்கிறது.

இந்த அற்புதமான சந்தர்ப்பத்தை மிகச் சரியாக பயன் படுத்தி 

அடுத்த கட்டத்திற்கு நம்மை நகர்த்த வேண்டும்.


சுவர் இருந்தால் தானே சித்திரம்!

தமிழ் நாடு இ பேப்பர் குழுமத்தின் விரிந்த தளம் செழித்தோங்கி வளர்ந்து நிலைத்தால் தானே நாம், நாம் என்றால் நம் படைப்புகள் நிலைத்து 

நெடிய வரலாறு படைக்க முடியும்.

மதிப்பு மிக்க படைப்பாள நண்பர்கள் இந்த கோணத்தில் சிந்தித்து தமிழ் நாடு இ பேப்பர் குழுமத்தின் 

தொடர்ந்த வளர்ச்சிக்கு 

தொடர்ந்து முனைப்புடன் புதுப்புது 

சிந்தனைகளால் செழிக்க வைத்து துணை புரிய வேண்டும்.

இது நம் எல்லோரின் கடமையாகவே எண்ண வேண்டும் என்று விரும்பி வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.



பி.சிவசங்கர்

கோவை

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%