மதுப் புழக்க வட்டாரத்தில் , 'சியர்ஸ்'
என்ற வார்த்தைக்கு காந்த ஈர்ப்பு சக்தி உண்டு என்பதை நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
மதுக் கோப்பைகளை பரஸ்பரம் தட்டி சத்தம் எழுப்பி சியர்ஸ் சொல்வதற்கு, சுவாரஸ்யமான காரணம் இருக்கிறது.
இது என் சொந்த சரக்கு இல்லை.
நண்பர் ஒருவர் தான் பத்தாண்டுகளுக்கு முன்பு சொல்லி பரவசப் படுத்தினார்.
நான் பெற்ற பரவசம் நீங்களும் பெற வேண்டாமா?
கோப்பைகளில் உள்ள மதுவை கண் பார்க்கிறது. என்ஜாய் பண்ணுகிறது.
ரம்மியமான வாசத்தை
மூக்கு முகர்ந்து என்ஜாய் பண்ணுகிறது.
மதுவை உறிஞ்சி சுவைக்கும் போது வாய் என்ஜாய் பண்ணுகிறது. சரக்கு உள்ளே இறங்கியதும்
உடல் முழுவதும் சிலீரென்ற சுகத்தில் என்ஜாய் பண்ணிக் கொள்கிறது.
இப்போது நன்றாகக் கவனியுங்கள்..
ஐம்புலன்களில்,
மெய், வாய், கண், மூக்கு ஆகிய நான்கும்
ஆனந்தம் அடைந்து திளைக்கும் போது, மீதியுள்ள 'செவி '
மட்டும் அய்யோ பாவமாக சோக உச்சத்தில் சுருங்கிப் போய் விடக் கூடாது அல்லவா?
அதனால் தான், கோப்பைகளைத் தட்டி
'ஸ்லிங்ங்ங்' என்று மெல்லிய ஒலியோடு சியர்ஸ் என்று சொல்லியும் செவியை
சாந்தப் படுத்தி, சந்தோஷப் படுத்துவதாக, சரக்கு ஐதீகக் குறிப்பு சொல்கிறதாம்!
சரி, அது இருக்கட்டும்.
நாம் முக்கிய மேட்டருக்கு வருவோம்.
மனிதனுக்கு ஐம்புலன்கள் மிக மிக முக்கியம் என்பது மட்டும் இல்லை.
மனிதனுக்கு ஆத்மார்த்த நண்பனும்
ஐம்புலன்கள்...
அதே நேரத்தில் அதிக பட்ச அநியாய பகைவனும் இந்த ஐம்புலன்கள் தான்.
இதைச் சரியாக ஆய்ந்து புரிந்து உணர்ந்து தான் நம் முன்னோர்கள்,
மனதை அடக்க நினைத்தால் அலையும்
அறிய நினைத்தால்
அடங்கும் ' என்று
மிக மிகத் தெளிவாக
சொல்லி வைத்தனர்.
சொல்லியதோடு நின்று விடாமல், மனதின் ஆதிக்கத்தில் இருக்கும் ஐம்புலன்களை எப்படி கையாள வேண்டும்?
என்பதை நினைத்துப்
பார்க்க முடியாத அகத்தாய்வு மூலம் வழி வகைகளைக் கண்டு பிடித்து,
ஆகச்சிறந்த முறையில் நமக்கு தந்து விட்டுச் சென்றுள்ளனர்.
எந்திர மயமான இந்த அவசர உலகில் இதையெல்லாம் உற்று நோக்கி உணர்ந்து, தெளிந்து கொள்ள
தவறி விட்டதால் தான்,
இங்கே பல அவலங்களை இந்த சமூகம் தொடர்ந்து சந்தித்து, சங்கடங்களில் தத்தளித்து தடுமாறுகிறது என்பதைப் புரிந்து கொள்ளும் போது தான், அருள் தரும் தெய்வம் போன்ற பொக்கிஷ இதழ்களின் மகத்துவம் நமக்குத்
தெரியும்... புரியும்.
அக்டோபர் 7 தேதியிட்ட தெய்வம் இதழைப் படித்து பரவசம் காணும் போது, இதை யெல்லாம் நம் வாசக சொந்தங்களுக்கு சொல்லத் தோன்றியது.
சொல்லி விட்டேன்.
எதையும் தெளிந்த பார்வையில் நோக்கும் வல்லமை மிக்க நம் வாசக சொந்தங்கள்
தெய்வம் இதழை தாங்கள் படித்து மேன்மை அடைவதோடு, உறவு, நட்புகளிடமும் தவறாமல் அறிமுகப் படுத்தி அவர்களையும்
மேன்மைப் படுத்துங்கள் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
பி.சிவசங்கர்
கோவை