வாசகர் கடிதம் (பி.சிவசங்கர்) 24.09.25

வாசகர் கடிதம் (பி.சிவசங்கர்) 24.09.25



தமிழ் நாடு இ பேப்பர் குழுமத்தின் வாசக சொந்தங்கள் அனைவருக்கும் அன்பான வணக்கம்.


தரமான இணைய வழி 

நாளிதழாக தடம் பதித்து வெற்றி நடை போடும் தமிழ் நாடு இ பேப்பர் குழுமத்தின் 

தனித்தன்மைக்கும் 

தளராத செயல் ஆக்கத்திற்கும் பாராட்ட வார்த்தை இல்லை. 


ஆன்மீகம் இங்கே தழைத்தோங்கவும் 

அறமும் அன்பும் செழித்தோங்கவும் 

இடையறாது இயங்கி வரும் ஆசிரியர் அவர்களுக்கும் அவர் தம் குடும்பத்தினருக்கும் 

நிர்வாக பணியாளருக்கும்

 நன்றி கூறக் கடமைப் பட்டுள்ளதாகவே உணர்கிறேன்.


எல்லாம் எளிதில் கிடைக்கும் இந்த அதிவேக அவசர எந்திர உலகில்,

இப்படிப்பட்ட அர்ப்பணிப்பு உணர்வுடன் உழைக்கும் உள்ளங்கள் அரிது...

அரிது.


தமிழ் நாடு இ பேப்பர் நமக்கு தாமதம் இல்லாமல் அளிக்கும் செய்திகள் ஒரு பக்கம் என்றால், வாழ்வியல் உயர்வுக்கு அவசியத் தேவையான அனைத்தையும் அலசி ஆராய்ந்து ஆராய்ந்து 

தேர்வு செய்து திகட்டாமல் திரட்டித் தருவது இன்னொரு பக்கம். ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் இருப்பது போல்... அகமும் புறமும் அப்பழுக்கற்று அற்புத அழகோடு திகழ என்ன செய்ய வேண்டுமோ,

அதை கனகச்சிதம் மிளிர தமிழ் நாடு இ பேப்பர் குழுமம் ஆற்றி வரும் அரும் பணிக்கு 

எல்லாம் வல்ல இறைவன் அருளும் 

வாசக சொந்தங்களின்

ஆதரவும் என்றென்றும் 

தொடர்ந்து நிலைத்த

அபிவிருத்தியை நல்கும். இதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை.


அடுத்து, நடப்பு அருள் தரும் தெய்வம் இதழ் பற்றி...


நவராத்திரி ஸ்பெஷல் கட்டுரையோடு கண்ணைக் கவரும் வண்ணம் நிறை அட்டைப் படங்களுடன்

வெளிவந்து நம் உள்ளம் கவர் நாயகனாய் திகழ்கிறது.


நேற்று வாசகர் கடிதத்தில் இது பற்றி 

வாசக சொந்தம் திரு.

வெங்கடாசலபதி அவர்கள் குறிப்பிட்டு 

சொல்லி பாராட்டி யிருந்தது நூறு சதவீதம் உண்மை...

உண்மை...!


மனிதனுக்குக் கிடைக்கும் தகவல்கள் 

நிறைவுத் தன்மை அடையும் போது, அது

அறிவாக பரிணாமம் பெறுகிறது.


இந்த அறிவு கனிவாகும் போது 

ஞானமாக சித்தித்து 

சிந்தையை உயர்த்தி 

மனிதனை மேம்படுத்தி அழகு பார்க்கிறது.


இந்த பரிணாம வளர்ச்சிக்கு உத்தரவாதம் அளிப்பது போல் தமிழ் நாடு இ பேப்பரும் 

அருள் தரும் தெய்வம் இதழும் விளங்கி வருவது மிகவும் மெச்சத்தக்கது.

பாராட்டத்தக்கது.


தெய்வம் இதழின் ஒவ்வொரு பக்கமும் 

மிகுந்த கவனத்துடனும் நேர்த்தியுடனும் செதுக்கப்பட்ட செம்மைத் தன்மையுடனும் செழுமைத் தன்மையுடனும் இருப்பதை நினைந்து நினைந்து இதயம் 

நெகிழ்கிறது.


நல்ல விஷயங்களை தேடிச் சென்று தன்னகப் படுத்தும் 

முயற்சியும் முனைப்பும் நம்மவர்களுக்கு கொஞ்சம் குறைவு என்பதால், திரும்பத் திரும்ப சொல்லத்தான் வேண்டி யிருக்கிறது.

( மதிப்புக்குரிய ஆசிரியர் அவர்கள் விரும்பாத போதிலும்)


தனி மனித ஒழுக்கம் 

ஓங்கும் போது

சமூக ஒழுக்கம் நிலைப்படுகிறது என்ற பேருண்மையை உணர்ந்ததோடு

நில்லாமல் உள்ளன்போடு 

நடைமுறைப் படுத்தி

நல்லதொரு சமுதாயம் காண துடி துடிக்கும் 

தமிழ் நாடு இ பேப்பர் குழுமத்தின் தலைமைக்கு என்றென்றும் வாழ்த்துகள்!

என்றென்றும் நன்றிகள்.

என்றென்றும் பிரார்த்தனை!

வாழ்க நலமுடன் 

வாழ்க வளமுடன் 



பி.சிவசங்கர்

கோவை

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%