வெயிலோடு உறவாடி...

வெயிலோடு உறவாடி...



-வி.கே.லக்ஷ்மிநாராயணன்

22,22 ஏ,ராமகிருஷ்ணா நகர் மெயின் ரோடு, ராமகிருஷ்ணா நகர் 

போருர் ,சென்னை 600 116 


கிழக்கு வெளுத்ததம்மா கீழ்வானம் சிவந்ததம்மா கதிரவன் வரவு கண்டு கமலமுகம் விரிந்ததம்மா ! 


திரைப்படத்தில் வரும் அருமையான பாடல் ஒன்று ! இருள் கழிந்து வெளிச்

சம் ஏற்படுவதைக் குறிக்கும் பாடல் !

இருட்டும் பகலும் மாறி மாறி வருவது

இயற்கையின் அற்புத விளையாட்டு !

இருட்டு மட்டுமே இருந்துவிட்டால் உல

கம் செழிக்காது. அதைப்போல் பகல்

மட்டுமே இருந்தால் சரியான இயக்கம்

இருக்காது.


வெயிலை நம்பி நாம்செயல்படுவதில்

நமக்கு விஞ்ஞான ரீதியாக நிறைய

அனுகூலங்கள் உண்டு. வீட்டுக்குள்

ளேயே முடங்கிக் கிடப்பதால் நிறம் மட்

டும் விருத்தியடையும். சுறு சுறுப்பு இருக்காது. காலை மாலை நம் உடல் வெயிலில் படும்பொழுது வைட்டமின் டி சுரக்க ஏதுவாகிறது. வெயில் காலத்தில் வேர்வைச் சுரப்பிகள் நன்கு வேலை செய்து உடலில் உள்ள தேவையற்ற உப்பை வேர்வையாக வெளியேற்றுகிறது. அதனால் நம் சிறுநீரகத்தின் பளு குறைகிறது.


நான் படிக்கும் காலத்தில் தினமும் வீட்

டின் பின்னால் கொஞ்சம் தள்ளி உள்ள பம்ப் செட்டிற்குநண்பர்களுடன் செல்வேன்.மோட்டார்ஓடிக்கொண்டிருக்கும்.ஒவ்வொருவராக ஏறி தொட்டிக் குள் இறங்கி குளிப் போம். நல்ல வெயில் காலத்தில் பம்ப் செட் குளி யல் உடலுக்கு சுகமாய் இருக்கும். நேரம் போவது தெரியா மல்குளித் துக்கொண்டிருக்கும்பொழுத மோட்டரை அணைத்துவிடுவர்..' தம்பிகளா..குளிச்சது போதும் கிளம்புங்க ' என்ற வார்த்தை வந்த வுடன் கிளம்ப மனசில்லாமல் அந்த இடத்தைவிட்டு அகலுவோம். நல்ல மனுஷர். இப்படிக்குளிக்க அனுமதி கொடுக்கிறாரே அதுவே போதும் என்ற நிம்மதியுடன் புறப்படுவோம்.


உடலில் ஒட்டிக்கொண்டிருக்கும் ஈரம்

அடுத்த சில நொடிகளில் காணாமல்

போகும். அந்த அளவுக்கு சுரீர் என்று

வெயில் அடிக்கும்.


அடுத்து தோட்டம் வழியாக நடக்கும்

பொழுது கொடுக்காப்புளி பழங்களை

கல்லால் அடித்து கீழே விழுவதை எடு த்து உண்போம். அதன் உவர்ப்பு கலந்த தித்திப்பு ஒரு அலாதியான

சுவைதான் !


சிலநாட்கள் பம்ப் செட் ஷெட் மூடியி ருக்கும். குளிக்கமுடியாத ஏக்கம் அன்றுபூராகவும் இருக்கும். அதனால் கொடுக்காப்புளி சீண்டப்படாமலும் 

மரத்தில தொங்கிக்கொண்டிருந்தது.


வெயிலில் சென்று பம்ப் செட்டில் குளி

த்து மறுபடியும் வெயிலில் திரும்பும் அந்த சுகம் மீண்டும் கிடைக்காதா என்ற ஏக்கம் அடிக்கடி ஏற்படுவது ண்டு.


காலம் மாறிவிட்டது.இன்று அங்கு பம்ப் செட் இல்லை. நிலங்களும் கிடையாது. வானுயர குடியிருப்புக் கட்டிடங்கள்தான்இருக்கின்றன. அந்த இடத்தை கடந்து செல்லும்பொ ழுதெல்லாம் இனம் தெரியாத சோகம் மனத்தை வாட்டும். ஆனால்அன்று உறவாடிய வெயில் மட்டும் மாறா

மல் இருக்கிறதே அது போதும் என்கிற சமாதானம் மட்டும் இன்னும் என் மனத்தில் இருந்துகொண்டே இருக்கிறது.

            

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%