வாசகர் கடிதம் (பி.சிவசங்கர்) 26.07.25

வாசகர் கடிதம் (பி.சிவசங்கர்) 26.07.25


உலகப் புகழ் பெற்ற எழுத்தாளர் மாக்சிம் கார்க்கி சொல்கிறார்...

' உலகிலேயே மிகவும் புனிதமானது எது தெரியுமா?


தன் இருப்பின் மீது திருப்தி அடையாத மனிதன் தன்னை மேம்படுத்துவதற்காக 

செம்மைப் படுத்துவதற்காக அவன் செய்கின்ற முயற்சி தான் உலகிலேயே புனிதமானது என்றார்!

ஆக அறிவுடன் இயங்கிக் கொண்டே இருப்பது தான் புனிதமானது.

உழைப்பில்லாமல் உயர்வு இல்லை 

..

இன்று அருள் தரும் தெய்வம் பத்திரிகை எனக்கு கிடைத்தது.

தரமான பேப்பரில் உயர்ந்த கருத்துக்கள் பதிவாகி சிறந்த முறையில் அச்சாகி யிருந்தது சார்!

இதழில் தெய்வீக மணம் கமழ்ந்தது.

நவக்கிரக சக்தி இழைந்தோடி யிருந்ததை சிம்பாலிக்காகவும் சொல்லியிருந்த நுட்பம் மெச்சத்தக்கது.

தெய்வம் இதழின் மொத்த பக்கங்கள் 36.

3+6=9 

ஒன்பது நவக்கிரகத்தை குறிக்கும் எண்ணாயிற்றே!

ஆசிரியர் குழுமத்தின் 

முழுமையான ஈடுபாடும் எழிலார்ந்த சிந்தனையும் தெய்வத்தின் மீது கூடுதல் நம்பிக்கையையும் தருகிறது. 

ஒரே ஆண்டில் ஒரு லட்சத்தை தாண்டும் 

வகையில் தெய்வத்தின் சர்குலேஷன் எகிரும் 

என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை.

சாய்பாபா துணை..!


முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் உடல் நிலையில் முன்னேற்றம்...

மகிழ்ச்சியான செய்தி.

தாய்லாந்து கம்போடியா ராணுவ மோதல் செய்தி 

வேதனை அளிக்கிறது.

சின்னஞ்சிறு நாடுகள் கூட போர் சதியில் மாட்டிக் கொள்வது மகா அபத்தமாகவே படுகிறது.

தமிழ் நாடு இ பேப்பரின் நான்காம் பக்கத்தில் நாளும் வெளியாகும் போரில்லா உலகம் கண்டிப்பாக நனவாக வேண்டும். 

நலம் தரும் மருத்துவம் பகுதியில் வெளியாகி இருந்த சீரகத்தின் நன்மைகள் மிகவும் பயனுள்ளவை. பேரீச்சம் பழம் அளவோடு சாப்பிட வேண்டும் என்று எச்சரித்திருந்தது

என்னைப் போன்ற 

டேட்ஸ் பிரியர்களுக்கு 

சரியான பாடம்!

மதிவாணன் எழுதிய 

சினிமா பைத்தியம் சிறுகதையின் முடிவு 

டச்சிங்காக இருந்தது.

வாழ்த்துகள்!

கவிதா சரவணனின் 

ஆடி மாத அருள் மகத்துவங்கள் அருமை தான்..

ஆனால் வீட்டில் பெண்கள் நம்மைப் படுத்தும் பாடு...

சில நேரங்களில் மன அழுத்தம் கூட உண்டாகி விடுகிறது,

அவர்களின் அதீத பக்தி ஆர்வத்தால்!

கவிதைகள் அனைத்தையும் தவறாமல் படித்து ஆனந்தம் கொள்கிறேன். கவிஞர் பெருமக்களுக்கு ராயல் சல்யூட்!

மொத்தத்தில் தமிழ் நாடு இ பேப்பர் ராஜ நடை போடுகிறது என்று தான் சொல்ல 

வேண்டும்!

தொடர்ந்து பயணிப்போம்.



பி.சிவசங்கர்

கோவை

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%