
இந்தியர்களை வேலைக்கு அமர்த்தக் கூடாது என்று அமெரிக்க பெரும் தொழில் அதிபர்களை டிரம்ப் மிரட்டி இருக்கிறார்.
இந்தியர்களை வேலைக்கு அமர்த்தினால் அந்த கம்பெனிக்குத் தான் லாபம். இந்தியருக்கு பதில் அமெரிக்கர்களை பணியில் அமர்த்தினால் இந்தியருக்கு கொடுப்பதை போன்று இரண்டு மடங்கு அல்லது மூன்று மடங்கு சம்பளம் அமெரிக்க பணியாளருக்கு கொடுக்க வேண்டியிருக்கும்.
இந்தியாவின் தென் மாநிலங்களில் வட மாநில தொழிலாளர்கள் லட்சக்கணக்கில் பணிபுரிகின்றனர். அவர்கள் குறைந்த கூலியில் அதிக நேரம் உழைக்கிறார்கள் என்பதுதான் அவர்களை பணியில் அமர்த்த காரணம்.
அது போலத்தான் அமெரிக்காவிலும். வெளிநாட்டவரை குறைந்த சம்பளத்திற்கு பணியில் அமர்த்துகின்றனர். இரண்டாவதாக இந்தியர்கள் பொறியியல் மற்றும் கணினி துறைகளில் உலக வல்லுனர்களுக்கு இணையானவர்களாக விளங்குகின்றனர்.
இந்தியர்களின் அறிவு திறன் காரணமாகத்தான் அவர்கள் உலகின் பல நாடுகளிலும் பரந்து விரிந்து பணியில் இருக்கின்றனர். ட்ரம்ப் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று பேசுகிறார்.
உரிமை மீட்பு பயணம் என்ற பெயரில் பாமகவின் அன்புமணி நடத்தும் சுற்றுப்பயணத்துக்கு தடை விதிக்குமாறு அவருடைய தந்தை ராமதாஸ் கேட்டுக் கொண்டிருக்கிறார் அதற்கு இணங்க தமிழக காவல்துறை அன்புமணியின் சுற்றுப்பயணத்துக்கு தடை விதித்து இருக்கிறது,
ராமதாஸின் கட்சி மீதான " உரிமை மீட்பு " நடவடிக்கை தமிழக அரசியலில் பரபரப்பாக பேசப்படுகிறது. கூட்டணி வைப்பதற்கு ராமதாஸ் ஒரு கட்சியை மனதில் வைத்திருக்கிறார். அவரது மகன் அன்புமணி வேறொரு கட்சியுடன் கூட்டணியில் பாமகவை இணைக்கும்படி நிர்பந்திக்கப்பட்டு இருக்கிறார்.
இதுதான் தந்தைக்கு மகனுக்கும் இடையேயான தகராறின் மூல காரணம்.
*******
வெ.ஆசைத்தம்பி
தஞ்சாவூர்
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?