
வாசகர் கடிதம் பகுதியில் தென்காசி வாசகர் திரு. பி.வெங்கடாசலபதி எழுதியிருந்த கருத்தில் முழுவதும் உடன்படுகிறேன்.
இலவசம் என்று சொல்லும் போதே
எதிர்மறையான எண்ணம் தான் மனதில் தோன்றுகிறது.
இலவசத்தால் பெறுபவருக்கும் பெருமை இல்லை.
கொடுப்பவருக்கும் பெருமை இல்லை என்பது எனது நீண்ட நாளைய நம்பிக்கை.
காரணம்... இலவசம் என்றாலே, அளிக்கப் படுகிற பொருள் எதுவாக இருந்தாலும்
எவ்வளவு மதிப்புள்ளதாக இருந்தாலும் மதிக்கப்
படுவதில்லை என்பது தான் உண்மை.
இதில் யாரையும் குறை சொல்வதற்கு ஒன்றும் இல்லை என்பது வேறு விஷயம்.
மனித மனத்தின் விசித்திரங்களில் இதுவும் ஒன்று.
இதனால் தான் நேற்று
வாசகர் கடிதத்தில் இந்தக் கருத்தை நண்பர் சுட்டிக் காட்டி இருந்ததைப் படித்த போது மகிழ்ச்சியாக இருந்தது.
தினந்தினம் 20 பக்கங்களில் தமிழ் நாடு இ பேப்பரின் ஆசிரியர் குழுவினர்
அற்புதமாக படைத்து வரும் செய்தி பிளஸ் தகவல் பிளஸ் படைப்பு
களஞ்சியத்தை ஓசியில் படிக்கும் போதெல்லாம் எனக்கு ஏதோவொரு குற்ற உணர்ச்சி இருந்து கொண்டே இருக்கிறது.
தமிழ் நாடு இ பேப்பர் குழுமத்தின் தலைமை
இந்தக் கருத்தை 'கன்சிடர்' பண்ணுவது
நல்லது...நல்லது!
தமிழ் நாடு இ பேப்பருக்கு சந்தா அறிவித்தால் வாசக பெருமக்கள் தவறாமல்
ஆதரவு அளிப்பார்கள்.
காரணம்... இரண்டு வருடங்களுக்கும் மேலாக தமிழ் நாடு இ பேப்பரை எந்தவொரு கட்டணமும் இல்லாமல்
வாசகர்களுக்கு தாராள மனதுடன் வழங்கி வருவதை அனைவரும் அறிவர்.
தமிழ் நாடு இ பேப்பர்
குழுமத்தின் பயணம்
தொடரட்டும்.
எல்லாம் வல்ல இறைவன் என்றென்றும் அருள் புரியட்டும்!
பி.பரமசிவன்
வடவள்ளி
கோயமுத்தூர்
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?