அக்டோபர் முதல் வாரத்தில் வெளியாகி இருக்கும் அருள் தரும் தெய்வம் இதழ் பற்றி
உத்வேகம் அளிக்கும் வகையில், பாஸிட்டிவ் வாக விமர்சனம் அளிக்கும் வாசக சொந்தங்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி...
நன்றி!
கமர்ஷியல் நோக்கம் இல்லாமல், கணந்தோறும சக்தியை மேம்படுத்தும் வல்லமை உள்ள வளமான கருத்துக்களை தாங்கி வரும் தரமான தெய்வம் இதழுக்கு
நாளுக்கு நாள் வாசகர்கள் அதிகரித்து வருவது ஆனந்தம் தரும் ஆரோக்கிய சூழல் என்று தான் கூற வேண்டும்.
தெய்வம் இதழைப் படித்து முடித்ததும்,
கடந்த இதழை விட இந்த லேட்டஸ்ட் இதழ்
கூடுதல் கனத்தில்
கனிந்து, கருத்துக் களஞ்சியமாக ஜொலிக்கிறது.
சிந்தையைக் குளிர்வித்து உள்ளத்தைப் பண்படுத்துகிறது என்று புத்தம் புது இதழைப் படிக்கும் போதெல்லாம் சொல்லத் தோன்றுகிறது.
இதற்கெல்லாம் மூல காரணம் -- முழுமுதற் காரணம், தெய்வம் இதழ் ஆசிரியரின் நேரடி கண்காணிப்பில் நேர்த்தியாக உழைக்கும் உன்னத பாணி தான் என்று அடித்துச் சொல்லலாம்.
மற்ற பக்தி இதழ்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் சிந்தித்து, வாசக சொந்தங்களின் வாழ்க்கையை மேம்பாடடைய வைக்கும் முயற்சியில்
திட சிந்தனை, தெளிந்த நம்பிக்கை,
தூய அன்பு கலந்து
தொலை நோக்குப் பார்வையில் பயணிக்கும் தெய்வம் இதழின் ஒப்பற்ற பணிக்கு தலை வணங்குவதோடு,
தொடர் வளர்ச்சிக்கு
தொடர்ந்து நாம் காரியம் ஆற்ற வேண்டும்.
நேற்றைய வாசகர் கடிதத்தில் கோவை வாசக நண்பர் திரு.
சிவசங்கர் அருமையாகக் குறிப்பிட்டு எழுதியிருந்தார்.
வெல்டன் மிஸ்டர் சிவசங்கர்.
இந்த நல்வழி அறப்பணியில் அனைவரும் முழு மனதோடு இறங்கி
அளப்பரிய காரியங்கள் ஆற்றி
தெய்வம் இதழின் சர்குலேஷனை உயர்த்திக் காட்ட வேண்டும் என்று அனைவரையும்
அன்புடன் வேண்டுகிறேன்.
முடியும் என்பதை மூச்சாக்குவோம்!
பி.வெங்கடாசலபதி
தென்காசி
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?