இதனால் தமிழ் நாடு இ பேப்பர் குழுமத்தின் சகல வாசக சொந்தங்கள் அனைவருக்கும் தெரிவிப்பது--வேண்டி
கேட்டுக் கொள்வது என்னவென்றால்...
என்று சொல்லுகிற பாணியில், தொடர்ந்து நமது த.நா. இ பேப்பரில், வாசகர் கடிதம் மூலம் எழுதி வருவதற்கு, பலன் உண்டு என்பதை நிரூபிக்கும் வகையில்
நேற்று ஒரு தித்திப்பான அனுபவம்.
நமது வாசக சொந்தங்களிடம் பகிர்ந்து கொள்ளா விட்டால், எனக்குத் தான் தலை வெடித்து விடுமே...!
சென்னை பல்லாவரத்தில் இருந்து திரு . கோபால்
அலைபேசியில் அழைத்துப் பேசினார்.
தன்னை, தமிழ் நாடு இ பேப்பரின் தொடக்க கால தீவிர வாசகர் என்று அறிமுகப் படுத்திக் கொண்டார்.
இ.பேப்பரில் தொடர்ந்து எழுதி வரும் படைப்பாளர்கள் பற்றிப் பெருமையுடன் அவர் குறிப்பிட்டது,
அவரின் பண்பினையும், பரந்த மன விசாலத்தையும்
வெளிப்படுத்தியது.
அடுத்து வாசகர் கடிதம் பகுதிக்கு முக்கியத்துவம் அளித்து பாராட்டி பேசினார்.
தமிழ் நாடு இ பேப்பர் குழுமத்தின் வளர்ச்சிக்காக, வாசகர் கடிதம் பகுதியில் எழுதும் வாசக அன்பர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருவது
ஆகச்சிறந்த ஆரோக்கிய சூழல் என்பதை அழுத்தமாகக் குறிப்பிட்டு ஆனந்தம் கொண்டார்.
விசாரிப்பு தருணத்தில் அவரின் வயதைக் கேட்டேன். 28 என்றார்.
ஐ.டி.யில் பணி என்றார். அசந்து போனேன் நான்.
இளைய பருவத்தில் எத்தனையோ வகை வகையான களிப்புக் களங்கள் இங்கே விரிந்து பரந்து இருக்கும் போது,
இணைய தளத்தில்
வெளிவரும் நமது தமிழ் நாடு இ பேப்பரை தினசரி தவறாமல் வாசித்து
உள் வாங்கி வருவதோடு நில்லாமல், சம்பந்தப் பட்டவர்களிடம் அலைபேசியில் தொடர்பு கொண்டு நட்பு பாராட்டி வருவது
எவ்வளவு பெரிய விஷயம்...
நினைந்து நினைந்து உளம் மகிழ்ந்தேன்.
இதில் குறிப்பிட வேண்டிய இன்னொரு ஆச்சரியமான-- ஆனந்தமான விஷயம் என்ன தெரியுமா?
இந்த 28 வயது அன்பு தம்பி அருள் தரும் தெய்வம் இதழின் மூன்றாண்டு சந்தாதாரர் மட்டுமல்ல.
தெய்வம் இதழின் 36
பக்கத்தையும் வரி விடாமல் வாசித்து வருபவராம்.
அலைபேசியில் அவருடன் உரையாடியது உள்ளத்திற்கு உவகை அளித்தது.
தமிழ் நாடு இ பேப்பர் குழுமத்திற்கு இது மாதிரியான தரம் மிக்க வாசகர்கள் பரந்து நிறைந்து உள்ளனர் என்று அறிகிற போது கூடுதல் சந்தோஷம் கிட்டுகிறது.
எல்லாம் வல்ல இறைவன் அருளால்
தமிழ் நாடு இ பேப்பர் குழுமத்தின் வளர்ச்சி மேலும் மேலும் பெருகட்டும்.
வாழ்க வளமுடன்
வாழ்க நலமுடன்
பி.வெங்கடாசலபதி
தென்காசி
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?