கலவர பூமியாக மாறி இனக் கலவரத்தில் பல உயிர்களை காவு வாங்கி இப்போதும் நீரு பூத்த நெருப்பாக இருக்கும் மணிப்பூருக்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பிரதமர் சென்று இருக்கிறார்.
மணிப்பூர் பற்றி எரிந்த போதெல்லாம் வெளிநாட்டு பயணத்தில் கவனம் செலுத்தியவர் இப்போது கரிசனத்துடன் மணிப்பூர் மக்களை சந்திக்க வந்து ஏராளமான திட்டங்களுக்கு நிதி ஒதுக்கி இருக்கிறார்.
இது மணிப்பூர் மக்களை கோபமடையச் செய்திருக்கிறது. பிரதமரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று இருக்கின்றன.
தேர்தல்களில் இதன் தாக்கம் நிச்சயம் தெரியும் என்று அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
கேரளாவில் மூளையை உண்ணும் அமீபா நோய்
இதுவரை 67 பேர்களுக்கு
வந்திருக்கிறது. அவர்களில் பதினெட்டு பேர்கள் மரணம் அடைந்து இருக்கிறார்கள்.
உலகில் எந்த மூலையில் தொற்று நோய் பரவ ஆரம்பித்தாலும்,
அவற்றை முதலில் இந்தியாவுக்கு கொண்டு வருவதில் கேரளா முதலிடம் வகிப்பது வருந்தக்கது.
" நலம் தரும் மருத்துவம் "
பகுதியில் தெருவில் விற்கப்படும் துரித உணவுகளை வாங்கி சாப்பிடுவதால் உயிருக்கே ஆபத்து ஏற்படக் கூடிய சாத்தியக் கூறுகள் இருப்பதை ஆதாரத்துடன் கூறியிருப்பது அனைவருக்கும் எச்சரிக்கையாக அமைந்தது.
ஜி எஸ் டி வரியை மத்திய அரசு இரண்டு அடுக்குகளாக மாற்றி அமைத்ததுடன் நிறைய வரி குறைப்பு செய்திருக்கிறது.
அதை மக்களைக் கவரும் ஒரு ஆயுதமாக தேர்தலுக்கு பயன்படுத்தலாம் என்று ஆளுங்கட்சி நினைக்கிறது.
அதனால் ஜிஎஸ்டி வரி குறைப்பை மக்களுக்கு விளக்குவதற்காக ஊடகங்களில் விளம்பரம் செய்கிறது.
இப்போது ஜிஎஸ்டி வரியை குறைத்து விட்டு தேர்தல் முடிந்த பிறகு மீண்டும்
வரியை ஏற்ற மாட்டார்கள்
என்பதற்கு என்ன உத்தரவாதம் ?
மாதாமாதம் நடக்கும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டங்களில் எந்த வரியை வேண்டுமானாலும் ஏற்றலாம் - குறைக்கலாம் அல்லது வரியிலிருந்து விலக்கு அளிக்கலாம் என்பதை மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
வெ.ஆசைத்தம்பி
தஞ்சாவூர்
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?