அன்புடைர்
வணக்கம். 16.9. 25 அன்றைய தமிழ்நாடு இ பேப்பர் டாட் காம் முதல் பக்கத்தில் அன்பு கரங்கள் திட்டத்தை நம் தமிழகம் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்து பேசியது நல்ல தகவல். பாராட்டுக்கள். இன்றைய பஞ்சாங்கம் மிக நல்ல நாளாக அமைய எனக்கு உதவியது மிகவும் நன்றி.
திருக்குறளை அதன் பொருளுடன் படிக்கும் போது மனதுக்குள் ஒரு உல்லாசம் வந்தது மிக்க நன்றி ஆசிரியர் மன்றம் முப்பெரும் விழா என்ற தகவலும் மற்ற படங்களும் மிகவும் அருமை.
சாலைகளில் விற்கும் பானி பூரியை அனைவரும் விரும்பி சாப்பிடுவது உண்மை. அந்த பானி பூரி சாப்பிட்டால் நோய் வருமா என்று எச்சரிக்கும் மருத்துவர்கள் பற்றிய குறிப்பினை நலம் தரும் மருத்துவர் பகுதியில் ஒரு விழிப்புணர்வு செய்தியாக படித்தேன்.
முதலமைச்சர் அவர்களின் வேண்டு கோளுக்கு இணங்கியபடி சங்கத்தமிழ் பாடல்களுக்கு இசையமைப்பேன் என்று இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா அவர்கள் சொன்னது மிகவும் நல்ல தகவல். அவருடைய பாடல்களை கேட்க ஆர்வமாக காத்திருக்கிறேன்.
தினம் ஒரு தலைவர்கள் பகுதியில் வந்த கரு முத்து தியாகராஜன் செட்டியார் வரலாறு அவரைப் பற்றிய தகவலும் அறிவுக்கு விருந்தாக இருந்ததால் ஆவலுடன் படித்து ரசித்தேன் மனமார்ந்த பாராட்டுக்கள்.
பல்சுவை களஞ்சியம் பக்கத்தில் வந்த சாஸ்திர விதிகளில் சில துளிகள் மிகவும் அருமையான தகவல். மீம்ஸ் பலமுறை பார்த்து ரசித்து சிரிக்க வைத்தது. மனம் நிறைந்த பாராட்டுக்கள். சமையலறை ஸ்பெஷல் அனைத்து தகவல்களும் மிகவும் அருமை. அரிசி வடகம் செய்வது எப்படி என்று சொல்லிக் கொடுத்தது மிகவும் பயனுள்ள தகவல் பாராட்டுக்கள்.
விழுப்புரத்தில் உள்ள கோலியனூர் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலில் ஸ்ரீ ஜெயந்தி உரியடி உற்சவம் என்ற படமும் செய்தியும் மிகவும் அருமை. மகா கும்பாபிஷேக விழா என்று திருவண்ணாமலையில் நடைபெற்ற காட்சிகள் மிகவும் அருமை மனமார்ந்த பாராட்டுக்கள்.
சுற்றுலா பக்கத்தில் அறிவுக்கு விருந்தாக கொடுத்த வாழ்க்கை பாடம் சொல்லும் பயணம் அருமையான தகவல் மனம் நிறைந்த பாராட்டுக்கள் வேலைவாய்ப்புக்கான பல நல்ல தகவல்களாக இருந்ததா வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு பயனுள்ள தகவலாக இருக்கும்.
முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அவர்கள் இருக்கும் வரை நாங்கள் கூட்டணியை ஏற்க மாட்டோம் என்று டிடிவி தினகரன் அவர்கள் சொன்ன செய்தி அரசியலை மிக அழகாக படம் பிடித்து காட்டியது.
சி சி டிவிக்களை கண்காணிக்க மனித தலையீடுகள் அற்ற தானியங்கி கட்டுப்பாடு அரை ஒன்று புதுடெல்லியில் அமைத்தது மிகவும் அருமையான தகவல்.
வெளிநாட்டினர் குடியேற்றத்தை எதிர்த்து லண்டனில் மாபெரும் பேரணி 1.5 லட்சம் பேர் பங்கேற்ற செய்தி அதிர்ச்சியாக இருந்தது. லண்டனில் நடந்த அந்த செய்தியை படத்துடன் பார்க்கும்போது லண்டனுக்கு சென்று வந்த ஒரு பிரமிப்பும் வியப்பும் ஏற்பட்டது.
செக்கச் சிவந்த வானத்தில் அதிகாலையில் சூரியன் வருவது உண்மை போல விடியலில் அலைபேசியில் தமிழ்நாடு இ பேப்பரின் அனைத்து செய்திகளும் தாங்கிய நாளிதழ் வருவது உறுதி என்று ஒவ்வொரு நாளும் உறுதி செய்யும் தமிழ்நாடு இ பேப்பரின் ஆசிரியர் குழுமத்திற்கு மனமார்ந்த பாராட்டுக்கள்
நன்றி
உஷா முத்துராமன்