
நன்னிலம் இளங்கோவன் எழுதிய " உத்திரவாதம்" - இன்றைய சூழலில் சைக்கிள் ஓட்ட முடியாததை உணர்த்தியது. மோட்டார் சைக்கிளில் வருவோரின் வேகம் விபத்தை ஏற்படுத்தும். பின்னால் வந்தவர் மோதியதில் முதுகுத் தண்டுவடம் அருகே அடிபட்டு மருத்துவ ஆலோசனையின்படி 2-3 மாதங்கள் பெல்ட் அணிந்து பின் மீண்ட அனுபவம் எனக்கே உள்ளது.
முகில் தினகரன் எழுதிய " ஆண்டவன் கோர்ட்டில்" என்னதான் இன்ஸ்பெக்டர் கங்காதரன், " அந்த மூதாட்டியிடம் நகையைத் திருடியது, ஓவியரிடம் சொன்ன அடையாளங்கள் மூலம் தன் மகன் எனத் தெரிந்து, அவனைக் காப்பாற்ற ஓவியத்தைக் கிழித்தாலும், விபத்தின் மூலம் மகனின் உயிர் போனது சரியான தண்டனை.
நூல் விமர்சனம் பகுதியில் சுழற்சி முறையில் எல்லோருக்கும் சமமாக வாய்ப்பளிக்கவும், அதே போல் கடிதங்களுக்கும் 2 பக்கங்கள் ஒதுக்கினால் நன்றாக இருக்கும் என்பது என் தாழ்மையான கருத்து.
ஸ்ரீகாந்த்
திருச்சி
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?