வாசகர் கடிதம் (P. கணபதி) 02.10.25

வாசகர் கடிதம் (P. கணபதி) 02.10.25


===============

அனைத்து வாசக சொந்தங்களுக்கும் வணக்கம். 


ஆனந்த பாஸ்கர் இதழில் ஆனந்தி என்ற பெயரில் வெளியாகும் உற்சாக வரிகள் உள்ளம் தொடுவதாய் உள்ளது. It's a good daily dose of positivity tonic. தொடரட்டும் நற்பணி.


கரூர் நெரிசல் மரண துயரம் ஜாலியன் வாலா பாக் அளவுக்கு பேசப்பட்டு வருகிறது. திரு. நயினார் நாகேந்திரன் அவர்கள், திரு. அன்புமணி அவர்கள் போன்ற தலைவர்கள் அரசின் போக்கை கடுமையாக விமரிசிக்கிறார்கள். யூ டியூபர்கள் மீது வழக்குகள் தொடுக்கப் படுகின்றன. கைதுசெய்யப்படுகிறார்கள். உயர் அதிகாரிகளை ஏவி அரசு சமாதானம் சொல்லிப் பார்க்கிறது. கையறு நிலையில் பேசும் திரு. விஜய் அவர்களின் வீடியோ கவனம் பெறுகிறது. விரைவில் சகஜ நிலை திரும்ப வேண்டுமென பிரார்த்திப்போம்.


பொருட்களின் விலை உயர்ந்தால் பணத்தின் மதிப்பு சரியும் என்பது அடிப்படை பொருளியல் சித்தாந்தம். Inflation leads to decrease in purchasing power. ஆனால் தங்கத்தின் விலை உயர்வால் லட்சாதிபதி கோடீஸ்வரன் ஆகிறானாம். விந்தை அல்லவா இது. 


கோவில்களின் முன் பிரசாதம் விற்கும் இந்து அல்லாதவர் மீது தாக்குதல் நடத்தலாம் என்று பிரக்யா தாக்கூர் மீண்டும் சர்ச்சைப் பேச்சு. இவர் ஒரு துறவியாம். 


சுற்றுலா குறித்த கட்டுரை மிக மிக அருமையான தகவல் களஞ்சியம். பள்ளி மாணவர்களின் கட்டுரைத் திறனுக்கு மதிப்பெண்களை அள்ளித்தரும் அபூர்வ சாதனம். இது மாணவர் சமுதாயத்துக்கான மகத்தான சேவை. 


இஸ்ரேலின் இனப்படுகொலை எண்ணிக்கை 66,000 ஐ தாண்டியுள்ள நிலையில் நெதன்யாகு கத்தாரின் இறையாண்மையை மீறி விட்டதற்காக மன்னிப்பு கோரியுள்ளார். இவர் மன்னிப்பு கேட்க வேண்டியது யாரிடம்?


20 நிபந்தனைகளுடன் கூடிய இஸ்ரேல் - பாலஸ்தீன் அமைதி ஒப்பந்தம் பல நாடுகளால் ஏற்றுக்கொள்ளப் பட்டுள்ளன, இந்தியா உட்பட. ஆனால் காசா மக்கள் ஏற்கவில்லை. மரத்தில் கனிந்தது மடியில் விழும் வரை அது எட்டாக் கனி தான். 


கூட்ட நெரிசலில் குழந்தைகள் மடிந்தது சோகம் தான். பெற்றோர் செய்ததும் தப்புதான். ஆனால் மனமறிந்து எந்தப் பெற்றோரும் தான் பெற்ற பிள்ளையை மரணக்குழியில் தள்ளமாட்டார்கள். எல்லோருக்கும் ஆதங்கம் இருக்கத்தான் செய்கிறது. ஆனாலும் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்ச வேண்டாமே. 


டக்ளமக்கான் பாலை நிலத்தில் 11,000 மீட்டர் ஆழத்துக்கு துவாரமிட்டு ஆராய்ச்சி செய்யும் சீனாவின் முயற்சி இரண்டு மெல்லிய பட்டு நூலிழைகளின் மீது ஒரு பெரிய ட்ரக்கை ஓட்டும் சாகசம் தான். அது வெற்றி பெற்றால் அதிகாரத்தின் சமநிலையை மாற்றி அமைக்கும் என்பது இதில் ஹைலைட். 


ஏராளமான வட்டாரச் செய்திகளை புகைப் படங்களுடன் வழங்கும் இ இதழின் சாதனை பிரமிக்க வைக்கிறது. அதிலும் குறிப்பாக செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் அவர்களின் படங்களுடன் கூடிய ஆன்மிக news reporting அருமை. கடின அயராத உழைப்புக்கு பாராட்டுக்கள். 


வாசகர் கடிதம் ஒன்றின் மூலம் மேலும் இரண்டு சந்தாதாரர் இணைந்துள்ள செய்தி மகிழ்ச்சி அளிக்கிறது. பாராட்டுக்கள். முயற்சிகள் தொடரட்டும். முன்னேற்றம் படரட்டும். 

மீண்டும் நாளை சந்திப்போம். நன்றிகள்.


P. கணபதி.

பாளையங்கோட்டை.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%