
அன்பான வாசக சொந்தங்களே!
தமிழ்நாடு இ இதழுக்கு சந்தா அறிவிக்க வேண்டும் என்ற பரிந்துரையை பூரணமாக வரவேற்கிறேன். சந்தா என்பதை விட நன்கொடை என்பதே பொருத்தமான வார்த்தை. இந்த நற்சிந்தனையை முன்மொழிந்த நல் உள்ளங்கள் நன்றிக் கடன் செலுத்தும் வழியைக் காட்டியுள்ளன. பாராட்டுக்கள்.
நியூயார்க் பிரகடனத்தை ஆதரித்து இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தை தனித் தனி நாடுகளாக அங்கீகரிக்கும் இந்தியா என்பது வரவேற்கத் தக்க செய்தியாகும்.
ஐ. நா. வின் பாதுகாப்பு சபைக் கூட்டத்தில் இஸ்ரேலும், பாகிஸ்தானும் பரஸ்பரம் சாடல் எனும் தகவல் காதுக்கு இதமான சங்கீதம்.
உக்ரைன் போரை நிறுத்துவத்தில் தோல்வியை ஒப்புக்கொண்ட அமெரிக்க அண்ணன் வரியை உயர்த்துமாறு நேட்டோ நாடுகளிடம் கெஞ்சுவது ஒரு காமெடி நாடகம்.
பிரதமரின் 3 மணி நேர மணிப்பூர் விஜயம் குறித்த திரு. கார்கேயின் விமரிசனம் எதிர் கட்சியின் பொருள் மிகுந்த குறிப்பாகும்.
ஐ. டி. பணியாளரான ஒரு சகோதரி சினிமா அரங்கத்தில் வைத்து தன் பணியைத் தொடர்ந்துள்ளார். இது சமூக வலை தளங்களில் பேசுபொருளாகி உள்ளது. (Work From Home) WFH என்பது முற்றி (Work From Theatre) WFT ஆகியுள்ளது. அவ்வளவுதானே!
ஆபத்பாந்தவனாக, உயிர் காக்கும் செயலியாகப் பயன்படும் போன் லாக் ஸ்க்ரீன் பற்றிய தொழில்நுட்பத் தகவல் மிகவும் உபயோகமுள்ள டெக்னிகல் அப்டேட். நன்றி.
A C காரில் உள்ள A C பயன்பாட்டின் நுட்பத்தை விபரமாக அறியச் செய்த திரு. நடேஷ் கன்னாவின் கட்டுரை கூடுதல் அப்டேஷன். பாராட்டுக்கள்.
அரசியலில் அதிரடி காட்ட களமிறங்குகிறார் ஜோதிர்பீட சங்கராச்சாரியார். முகம் சுழிக்கவைக்கும் செய்தி. "பசு, பதி, பாசம்" என்ற தத்துவத்தில் உள்ள "பசு" என்பதை மாடு என்று புரிந்துகொண்டாரோ என்னவோ.
வெ. நாராயணன் லால்குடி அவர்களின் வைத்தீஸ்வரன் கோயில் பற்றிய விரிவான கட்டுரை சிறப்பு. அக்கோயில் ஊரில் பிரபலமான ஏடு படித்தல் பற்றிய செய்தியை எதிர்பார்த்தேன். குறிப்பிடப்படவில்லை.
வெளியாகியுள்ள திரு. வெ. கல்யாண்குமார் அவர்களின் நான்கு கவிதைகளும் அருமை. அதிலும் ராம நாமத்தின் மகிமை மற்றும் அப்பன் முருகனின் லாவண்யம் பற்றிய கவிதைகள் ஜோர்.
"பட்டணத்து மருமகள்" கதையை எத்தனை முறை தான் படிப்பது?
பத்திரிகைகளின் விற்பனை 2.77 % உயர்வு என்பதும், இது அச்சு, ஊடகத் தொழிலின் ஆரோக்கியமான வளர்ச்சி என்பதும் சுவையான தகவல்.
மீண்டும் நாளை சந்திப்போம். நன்றி.
P. கணபதி
பாளையங்கோட்டை.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?