
இளையராஜா 50
இசைஞானி இளையராஜா திரை உலகில் அன்னைக்கிளி துவங்கி இன்று வரை 50 ஆண்டு இசை உலகில் முடி சூட மன்னனாக வெற்றி வாகை சூட்டி வருகிறார் தற்போது அவரது சிம்பொனி ஆசிய கண்டத்தில் ஒரு இந்தியராக மாபெரும் இசை மேதையாக ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் இந்தியர்களுக்கும் பெருமை சேர்த்துள்ளார் அதை கொண்டாடும் வகையில் தமிழக அரசு முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இளையராஜாவிற்கு மாபெரும் பாராட்டு விழா எடுத்தது ஒட்டுமொத்த தமிழ் சமுதாயத்திற்கும் இசை ரசிகர்களுக்கும் அளவு கடந்த மகிழ்ச்சி மு க ஸ்டாலின் அவர்கள் இளையராஜா
விற்கு
"பாரத ரத்னா" விருது வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தது பாராட்டத்தக்கது விரைவில்
"பாரத ரத்னா" இளையராஜா விருது பெற வாழ்த்துகிறேன் அவரது பெயரில் இசை கலைஞர்களுக்கு தமிழக அரசு விருது வழங்குவது மாபெரும் கவுரவம் இளையராஜா 50 ஆண்டுகாலம் இசை பயணம் பண்ணைபுரம் என்ற கிராமத்தில் கிளம்பி சென்னையில் இருந்து தமிழ் தெலுங்கு ஹிந்தி மலையாளம் கன்னடம் உள்ளிட்ட இந்திய மொழிகளிலும் 1500 படங்களுக்கு மேல் இசை அமைத்து எண்ணற்ற பாடல்களை தந்திருக்கிறார் இந்திய சினிமாவின் பின்னணி இசை சேர்ப்பிற்கு இளையராஜாவிற்கு நிகர் வேறு யாரும் கிடையாது பாரதப் பிரதமர் மோடியே சமீபத்தில் இளையராஜாவின் இசை பாடலை கேட்டு வியந்து கைதட்டி ரசித்ததை அனைவரும் கண்டோம் அவருக்கு இந்த உலகில் எங்கு தான் ரசிகர்கள் இல்லை ஒட்டுமொத்த ரசிகர்களின் தன் இசையால் தாலாட்டும் ஒரு தாயாகத்தான் அனைவரும் பார்க்கிறார்கள் இந்த விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உலக நாயகன் கமல் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அனைவரும் இளையராஜாவிற்கு பெருமை சேர்க்கும் வகையில் பேசியது சிறப்பாக இருந்தது ஒட்டுமொத்த ரசிகர்களின் அன்பில் இளையராஜா பேரானந்தம் அடைந்ததை பார்க்க முடிந்தது அந்த நிகழ்வை கண்முன் வண்ணப் பக்கமாக தமிழ்நாடு இ பேப்பர் . காம் அற்புதமாக தந்துள்ளது
போயஸ் கார்டன்
பொன்விழி அன்னூர்
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?