வாசகர் கடிதம் (P. கணபதி) 25.09.25

வாசகர் கடிதம் (P. கணபதி) 25.09.25


அருமை வாசக உள்ளங்களுக்கு அன்பு வணக்கங்கள்.


இன்றைய நமது தமிழ்நாடு இ இதழில் வாசித்த செய்திகளும் வாசக சொந்தங்களின் படைப்புகள் அத்தனையும் சுவையோ சுவை. அவற்றுள் மனம் கவர்ந்த சில, ஒரு சோற்றுப் பதமாக இங்கே :


கோபி. பச்சமுத்து அவர்களின் பாஞ்சஜன்யம் என்ற சங்கின் புனிதமும், தனித்தன்மையும் குறித்த விரிவான கட்டுரை ஒரு அறிவுத் தெளிவாக அமைந்துள்ளது. பாராட்டுக்கள் ஐயா. 

இன்னொரு தகவலும் ஞாபகத்துக்கு வந்தது. ஸ்ரீகண்ணபிரானைப் போலவே பஞ்ச பாண்டவர்களும் தத்தமது போர்ச் சங்குகளை ஒலித்து உற்சாகம் எய்தினர். அதன்படி அர்ச்சுனன் ஒலித்தது தேவதத்தம். பீமன் ஒலித்தது பவுண்ட்ரம். தர்மன் அனந்தவிஜயம், நகுலன் சுரகோஷம், சகாதேவன் மணிபுஷ்பகம் என்ற சங்குகளை ஒலித்தனர் என்று பாரதம் கூறுகிறது. Just ஒரு தகவலுக்காக. 


எவை எவை மருந்துகள் என திரு. நடேஷ் கன்னா அவர்கள் தொகுத்துள்ள பட்டியல் உடலுக்கும், மனதுக்கும் பிணியகற்றி, வாழ்க்கைக்கு உரமூட்டும் சஞ்சீவிகளின் தொகுப்பாகத் தோன்றுகிறது. பின்பற்றத் தக்கவை.நன்றிகள். 


விடுதலை மறவர் முத்து வடுக நாதரின் வீர சரித்திரம் விழுப்புண்களின் வெற்றியாகவும், விடுதலை மகுடத்தின் வெளிச்சமாகவும் மிளிர்கிறது. ஆங்கில யானைக்கு அங்குசமாக வாழ்ந்து மறைந்த அற்புதத் தமிழன். நல்லதொரு வரலாற்றுச் சித்திரம். 


கல்யாணச் சாப்பாடு பற்றிய திரு. கருமலைத் தமிழாழன் அவர்களின் கவிதை எல்லோருக்குமான representative கவிதையாகும். நகைச்சுவை விரவிய நையாண்டிக் கவிதை really sweet. 


அமைதிக்கான நொபேல் பரிசு வேண்டுமானால் ட்ரம்ப் காஸா போரை நிறுத்த வேண்டும் என்ற பிரெஞ்சு அதிபர் மேக்ரானின் கருத்து,


இஸ்ரேலின் ஆயுதக் கப்பல்களுக்கு ஸ்பெயின் துறைமுகங்களில் இடமளிக்கக் கூடாது என்ற ஸ்பெயின் மக்களின் கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது போன்றவை நல்ல செய்திகளாகும்.


முதல் பக்கத்தில் வந்துள்ள திருமதி. பீலா வெங்கடேசன் I. A. S. அவர்களின் மறைவுச் செய்தியில் மனம் வலித்தது. May her soul rest in peace. 


நமது தமிழ்நாடு இ இதழுக்கு தொடர்ந்து படைப்புகளை அனுப்பி மகிழும் வாசக சொந்தங்களின் பெயர்களைப் பட்டியலிட்டுப் பார்த்தேன். எண்ணிக்கை 45 ஐத் தாண்டியது. 45க்கும் மேற்பட்ட நாம் ஆளுக்கு இரண்டு நபர்களை தெய்வம் இதழின் சந்தாதாரர் ஆக்கினால் கூட சுலபமாக 100 ஐத் தொட்டுவிடலாமே. இந்தச் சந்தர்ப்பத்தில் ஒரு விஷயம் ஞாபகம் வருகிறது. 


சிறுகதை சிங்கம் என்று பெயர் பெற்ற புதுமைப்பித்தன் (அவரது இயற்பெயர் சொ. விருத்தாச்சலம்) அவர்களின் ஆசிரியத்துவத்தில் "மணிக்கொடி" என்ற தமிழ் சிற்றிதழ் 1933 - 1939 வரை சிறப்பாக வெளிவந்தது. பின்னாட்களில் பிரபலம் பெற்ற தமிழ் இலக்கிய ஜாம்பவான்களான மௌனி, ந. பிச்சமூர்த்தி, பி. எஸ். ராமையா, கு. ப. ரா., கு. அழகிரிசாமி, அறிஞர் அண்ணா, போன்ற பலரின் படைப்புகளுக்கு இடமளித்து அவர்களைப் பிரபலமாக்கியது மணிக்கொடி சிற்றிதழ். அதையே தான் இப்போது செய்து வருகிறது தமிழ்நாடு இ இதழ் குழுமம். அவர்களுக்கு நன்றிக் கடன் செலுத்துவது நம் கடமை அல்லவா? சிந்திப்போம். செயல்படுவோம். தெய்வம் இதழின் சந்தாதாரர் பரப்பை விசாலமாக்குவோம். தெய்வம் இதழ் வளரட்டும். ஆன்மீகம் ஒளிரட்டும். நன்றிகள்.


P. கணபதி

பாளையங்கோட்டை.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%