
இன்று (07.10.2025) தமிழ்நாடு இ பேப்பரில் முதல் பக்கத்தில் பிகார் மாநில சட்டமன்றத் தேர்தல் மற்றும் சனாதன தர்மம் அவமதிப்பு என கூறுபவர்கள் சனாதன தர்மம் என்றால் என்ன என்பதை விளக்க வேண்டும்.
உள்ளூர் செய்திகள் சிந்திக்க ஒரு நொடி பகுதியில் இடம்பெற்ற கருத்து எதார்த்த உண்மை, நலம் தரும் மருத்துவம் பகுதியில் சப்பாத்தி எவ்வாறு எடுத்து கொள்ள வேண்டும் என கூறியது அனைவருக்கும் பயன்படும்.
தமிழ்நாடு மீனவர்கள் மீது இலங்கை கடற்படை மற்றும் கடற்கொள்ளையர்கள் தாக்குதல் தொடர் கதையாக தொடர்வது வேதனை அளிக்கிறது. மத்திய அரசு இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.
யாதுமாகி நின்றவள் தொடர் கதை மற்றும் அறம் பாடுதல் என்றால் தொகுப்பு சிறப்போ சிறப்பு!! பல்சுவை களஞ்சியம் பகுதியில் சாப்பிட்ட பிறகு செய்யக்கூடாதவைகள், ரவுசு ரமணி, சுற்றுலா பகுதியில் சிறிய நாடுகள் பற்றி பல அரிய தகவல்கள் தெரிந்து கொண்டேன்.
தமிழ்நாடு இ பேப்பர் படிக்க படிக்க பல அரிய தகவல்கள் தினம் தோறும் தெரிந்து கொள்கிறேன். தமிழ்நாட்டு இ பேப்பர் குழுவிற்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்!! வாழ்க! வளர்க!!
*T.P.குமரன், மகர்நோம்புச்சாவடி, தஞ்சாவூர்.*
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?