வாசஙர் கடிதம் (உஷா முத்து ராமன்) 27.09.25

வாசஙர் கடிதம் (உஷா முத்து ராமன்) 27.09.25

 

அன்புடையீர்,


 வணக்கம். 27. 9. 25 அன்றைய தமிழ்நாடு இ பேப்பர் டாட் காம் முதல் பக்கத்தில் மருந்துகளுக்கு 100% இறக்குமதி வரி என்று செய்தி அதிர்ச்சியாக இருந்தது. இன்றைய பஞ்சாங்கம் மிக அருமையாக எனக்கு நல்ல நாளாக காட்டியது பாராட்டுக்கள்.


திருக்குறளை அதன் பொருளை புரிந்து கொண்டு படித்தேன் அருமையாக இருந்தது பாராட்டுக்கள். பள்ளி கட்டும் பணிக்காக பூமி பூஜை திருவண்ணாமலை நடைபெற்ற செய்தியும் படமும் மிகவும் அருமை பாராட்டுக்கள்.


டிடிவி தினகரன் அவர்களை சந்தித்தேனா என்று செங்கோட்டையன் அவர்கள் விளக்கம் சொன்னது அரசியலை மிக அழகாக தெளிவாக காட்டியது. காலாண்டு விடுமுறை வார இறுதி நாட்கள் சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்குவது மிக மிக நல்ல தகவல். பாராட்டுக்கள்.


வேலூர் விஐடி பல்கலைக் கழகத்தில் 3 நாட்கள் நடைபெறும் திராவிடாஸ் அறிவு சார்ந்த மிகவும் அருமை படத்துடன் பார்க்கும்போது அந்த இடத்திற்கே சென்றது போல ஒரு பிரமிப்பு ஏற்படுகிறது.


தினம் ஒரு தலைவர்கள் பகுதியில் காயிதே மிலத் அவர்களின் வரலாறு மிகவும் அருமை கருப்பு வெள்ளை படத்துடன் அவரைப் பற்றிய செய்தி மிக அருமையாக இருந்தது பாராட்டுக்கள்.


பல்சுவைக் களஞ்சியம் பகுதியில் வந்த பஸ்ஸில் ஒரு பயணம் மிக அருமையாக இருந்தது. மீம்ஸ் பலமுறை பார்த்து ரசித்து சிரிக்க வைப்பது பாராட்டுக்கள்.


வாழ்வு தரும் ஆரோக்கியம் பகுதியில் வந்து அனைத்து தகவல்களும் மிகவும் அருமை.. முதுகு வலி நிவாரணத்திற்கான உடற்பயிற்சிகள் அனைவருக்கும் பயனுள்ள தகவல் பாராட்டுக்கள்.


வராஹி அம்மன் நவராத்திரி அலங்காரம் மிகவும் அருமையாக இருந்தது. கண்கொள்ளா காட்சி காட்சியாக விழுப்புரத்தில் உள்ள சாலமேடு வாராஹி அம்மன் சன்னதிக்கு சென்று வந்தது போல ஒரு சந்தோஷம் ஏற்பட்டது.


சுற்றுலா பக்கத்தில் வந்த புதிய இடம் தனிப்பயணம் பயம் உங்களை பிடித்து விட்டதா எப்படி மீளலாம் என்று நல்ல பயனுள்ள தகவலை சொன்னது இதுபோல தனியாக பயணம் செய்பவர்களுக்கு மட்டுமல்ல அனைவருக்கும் பயனுள்ள தகவல் பாராட்டுக்கள்.


கள்ளக்குறிச்சியில் புதிய பேருந்து நிலையம் அமைக்க தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது மிகவும் அருமையான தகவல்


விளையாட்டு செய்திகள் ஒவ்வொன்றும் மிகவும் அருமை ஆர்வமுடன் எங்கே என்னை நடக்கிறது என்று புரிந்து கொள்ள முடிந்தது.


ரஷ்யாவை தவிர வேறு எங்கு வேண்டுமானாலும் இந்தியா கச்சா எண்ணெய் வாங்கலாம் என்று அமெரிக்கா சொன்ன தகவல் அதிர்ச்சியாக இருந்தது.


எல்லா பக்கங்களிலும் வெல்லம் என்ற இனிக்கும் நல்ல செய்திகளை கொடுத்து புதிய விடியலுக்கு அச்சாரமிடும் தமிழ்நாடு இ பேப்பரின் ஆசிரியர் குழுமத்திற்கு மனமார்ந்த பாராட்டுக்கள் .


நன்றி 

உஷா முத்து ராமன்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%