எல்லையில்லா வானம்..மிக்க
எழில்மிகுந்தே காணும்
தொல்லையில்லா வானம்...நல்ல
தோற்றந்தான் ஈனும்!
அல்லலில்லா வானம்..என்றும்
அற்புதத்தைப் பேணும்
கல்லாத செய்தி..நாளும்
கற்கண்டாய்க் காணும்!
உலகமொரு நீதி..ஒருநாள்
ஒழுங்காக ஓதும்
கலைகளையே ஆக்கும்..நல்ல
கருத்தினையே தேக்கும்!
நலநிலையே கண்டு..இனிமை
நாளெல்லாம் கொண்டு
பலகலையும் தோற்றி..நல்ல
பண்பாட்டை வெல்லும்!
*முனைவர்*
*இராம.வேதநாயகம்*
திருவண்ணாமலை.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%