ஒரு குடையில் இல்லை இல்லை
ஒரே குடையில் இருவரும்
அவசரம் தெரிகிறது
ஆனந்தம் புரிகிறது
வயதொன்றும் தடையில்லை
வாழ்க்கையை வாழ நினைப்போர்க்கு
எதிர்பாரா மழையில்லை
கொண்டுவந்த குடை சாட்சி
ஒன்றாக செல்லவேண்டும்
நனையாமல் இருக்க வேண்டும்
நனைந்தவர் தான் தோற்றவர்
தோற்றவர்க்கே பரிசு
அதை தருவதும் வெற்றி பெற்றவர்
தன்னை நனையாமல் காத்ததற்கு
வயதாகி போயினும்
அன்னியோன்யம் குறைவில்லை
அன்பு பரிமாற்றம் அளவில்லை
நிறைவான வாழ்க்கை
வாழ்பவர்களுக்கே இது புரியும்
வாழ்க்கை வாழ்வதற்கே
நம் வாழ்க்கை நாம் வாழ்வதற்கே
ஓம் குமார் P N
தெற்கு வாசல், மதுரை 625001
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%