வேலூர், நவ. 25-
வேலூர் மாவட்டம், காட்பாடி காந்திநகர் அறிஞர் அண்ணா மாவட்ட கிளை நூலகத்தில் தேசிய நூலக வார நிறைவு விழா நூலக உலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் வாசகர் வட்ட தலைவர் வி பழனி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக காட்பாடி வட்ட ரெட் கிராஸ் சங்கத்தின் அவைத்தலைவர் முனைவர் செ. நா.ஜனார்த்தனன் பங்கேற்று கவிஞர் எழுத்தாளர் வசந்த நாயகன் எழுதிய நூலினை அறிமுகம் செய்து வைத்து பேசினார்.
எழுத்தாளர் கவிஞர் ஜி விநாயகம் வசந்த நாயகன் ஏற்புரை வழங்கினார். நூலகத்திற்கு பல பயனுள்ள நூல்களை வழங்கினார்.
ஓய்வு பெற்ற நூலகர் எஸ். தாமோதரன், துளிர் பள்ளி தலைமையாசிரியர் த.கனகா ஆகியோர் வாழ்த்தி பேசினர். இந்த நிகழ்வில் நூலகத்தின் தந்தை எஸ். ஆர். ரங்கநாதன் நூலகத்திற்கு ஆற்றிய பணிகள் குறித்தும், இன்றைய நூலக செயல்பாட்டிற்கு அவரது பங்களிப்பு குறித்தும் விவாதிக்கப்பட்டது. முடிவில் நல் நூலகர் தி மஞ்சுளா நன்றி கூறினார்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?