மண்ணுக்கும் விண்ணுக்குமான போட்டியில்
மரங்களைத் தொலைத்த அவலம்.
வயலுக்கும் வாழ்வுக்கும்,
நிழலுக்கும் போராட
எவருமில்லை இங்கு.
நகரமயமாதலில்
குடி'கள் விரிவடைகிறது
அரசுக்கோ
வருமானம் தாராளம்.
பசித்தீ யால்
பற்றி எரிகிறது வயிறுகள்.
சமூக நீதி
காட்சிப்படுத்தப்படுகிறது.
நடைமுறையில்
மானுடம்
தோற்றுப் போகிறது.
கோயில் பிரசாதங்களில் கூட
கலப்படம்.
சோதித்துப் பார்த்தார்களா முதலாளிகள்.
கடவுளும்
அவர்களை தண்டிக்கவே இல்லை.
இறைச்சி ஏற்றுமதியில்
முன்னிலை வகிக்கும் நாட்டில்
ஆதிக்க சக்திகளின் பின்னணியில்
அப்பாவிகளை தண்டிக்கும் கோழைகள்.
உலகுக்கு மட்டுமே உபதேசம்.
உள்ளூரில்
ந(மெ)லிந்தோரைக் கொல்லும் அவலம்.
வாய்மை எப்போது தான் வெல்லும்?...
உண்மையும் அப்போது சொல்லும் !...

எறும்பூர் கை. செல்வகுமார்,
செய்யாறு.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?