வாழ்க்கை..

வாழ்க்கை..

🌿  🌿


வாழ்க்கை…

ஒரு முடிவற்ற கவிதை.


நாம் அறியாத முதல் வரியும்,

எழுத முடியாத இறுதி வரியும்

ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டவையே.


நடுத்தர வரிகளில்...

சிலவற்றை மனம் எழுதும்,

சில நினைவுகள் நிகழ்த்தும்,

சில வரிகளில் வலி தழுவிடும்.


இன்பம், மகிழ்ச்சி, சோகம், துன்பம் என மாறும் 

வாழ்வின் பல அத்தியாயங்கள்

கவிதையின் ஓட்டத்தை அமைக்கும்.


எதிர்பாராத சந்திப்புகளும்,

எதிர்பார்த்த பிரிவுகளும்

யதார்த்த வாழ்க்கையின்

இயல்பான நிகழ்வுகளே.


அன்பென்னும் இசை

சீரற்ற இடைவெளியையும்

இனிமையான இன்னிசை ராகமாக மாற்றிடும்.


ஆம்,

வாழ்க்கை ஓர் கவிதைதான்...

அதன் முழுப் பொருளை

வரிகளால் எழுத முடியாது.


எனினும்…


ஒவ்வொரு நாளும்

அதை உணர்ந்து, புதிதாக

படித்து புரிந்து கொள்வதில்தான்

அதன் அழகு மறைந்திருக்கிறது. ✨



நா.பத்மாவதி

கொரட்டூர்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%