விஜயவாடா டூ விசாகப்பட்டினம் ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்ப கோளாறால் ரத்து; பயணிகள் கடும் அவதி

விஜயவாடா டூ விசாகப்பட்டினம் ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்ப கோளாறால் ரத்து; பயணிகள் கடும் அவதி


 

அமராவதி: விஜயவாடா அருகே உள்ள கன்னவரம் விமான நிலையத்தில் இருந்து விசாகப்பட்டினம் செல்லவிருந்த ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக திடீரென ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.


ஆந்திரா மாநிலம் விஜயவாடா அருகே உள்ள கன்னவரம் விமான நிலையத்தில் இருந்து விசாகப்பட்டினத்திற்கு நேற்றிரவு 9 மணிக்கு ஏர் இந்தியா விமானம் புறப்பட தயாரானது. விமானம் ஓடுபாதையில் சென்று கொண்டிருந்தபோது, ​இன்ஜினில் கோளாறு ஏற்பட்டதை விமானி அறிந்தார். உடனடியாக அவர் விமானத்தை ஓடுபாதையில் நிறுத்திவிட்டார்.


பின்னர் விமானத்தில் ஏற்பட்ட கோளாறை சரி செய்யும் பணியில் தொழில்நுட்ப நிபுணர்கள் ஈடுபட்டனர். ஆனால் விமானத்தில் கோளாறு சரிசெய்ய முடியவில்லை. இதனால் விமானம் ரத்து செய்யப்படுவதாக விமான நிறுவனம் அறிவித்தது. தற்போது விமானம் பழுது பார்க்கும் இடத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. விமானத்தின் இன்ஜினில் ஏற்பட்ட பிரச்னையை சரி செய்யும் பணியில் சிரமம் நீடிக்கிறது.


விமானம் திடீரென ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, ஆந்திரா வேளாண்மைத் துறை அமைச்சர் கின்ஜராபு அச்சனாயுடு ஆகியோர் பயணத்தை ரத்து செய்ய வேண்டியிருந்த அந்த விமானத்தின் பயணிகளில் அடங்குவர்.


இது குறித்து, ஏர் இந்தியாவின் செய்தித் தொடர்பாளர் கூறியதாவது: பயணிகளின் பாதுகாப்புக் கருதி, விஜயவாடா-விசாகப்பட்டினம் விமானம் புறப்படுவதற்கு முன்பு, தொழில்நுட்பக் கோளாறைக் கண்டறிந்த பிறகு ரத்து செய்யப்பட்டது.


பயணிகளுக்கு ஹோட்டலில் தங்குமிடம் மற்றும் பணத்தை திரும்ப வழங்குதல் அல்லது மாற்று விமான ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டது. பயணிகளுகு்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%