விஜய்க்கு வருவது சினிமா மோக கூட்டம்,அமைச்சர் ரகுபதி சொல்கிறார்
Sep 17 2025
44

புதுக்கோட்டை, செப். 18-
நடிகரை பார்க்க கூட்டம் கூடுவது இயற்கை. சினிமா மோகத்தால் வருகிறார்களே தவிர, அரசியல் மோகத்தால் அல்ல என்று விஜயை அமைச்சர் ரகுபதி சாடினார்.
புதுக்கோட்டையில் நேற்று அமைச்சர் ரகுபதி அளித்த பேட்டி-
யாரையும் எந்த நேரத்திலும் கழற்றிவிடக் கூடியவர் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி என்பதால், அக்கட்சி தொண்டர்கள் விழித்துக் கொள்ள வேண்டும். அவருக்கு ஆட்சி முக்கியமல்ல. பொதுச் செயலாளர் பதவிதான் முக்கியம். அவரால் அதிமுக கூட்டணியை ஆட்சிக்கு கொண்டு வர முடியாது.
பொதுச் செயலாளர் பதவியை வைத்துக் கொண்டு, கட்சியை பாஜகவிடம் அடகு வைத்துவிட்டார். பாஜகவுக்கு நன்றியுடன் இருப்பதாகக் கூறும் பழனிசாமி, இந்த நன்றியுணர்வை கடந்த மக்களவைத் தேர்தலில் காண்பித்திருக்கலாமே?.
சினிமா மோகம்
பிரச்சாரம் என்ற பெயரில் பள்ளி மாணவர்களை சுற்றுலா அழைத்துச் சென்று கொண்டிருக்கிறார் நடிகர் விஜய். சிறிய கடையைத் திறக்க வரும் நடிகரை பார்க்க கூட்டம் கூடுவது இயற்கை. சினிமா மோகத்தால் வருகிறார்களே தவிர, அரசியல் மோகத்தால் அல்ல.
திருச்சிக்கு விஜய் வந்தபோது விமான நிலையத்தில் நடைபெற்ற சம்பவத்துக்கு மத்திய அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும். எல்லோருக்கும் எல்லாம் என்ற கொள்கையை கொண்டிருக்கிற ஒரே இயக்கம் திமுக. எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்கக்கூடியதுதான் திராவிட மாடல் ஆட்சி. சட்டப்பேரவைத் தேர்தலில் சமத்துவ ஆட்சி அமைப்போம் என்று பழனிசாமி கூறியதன் மூலம், சமத்துவ ஆட்சியாக உள்ள திமுகதான் மீண்டும் வரும் என அவர் ஒப்புக் கொண்டதற்கு நன்றி .
இவ்வாறு ரகுபதி கூறினார்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?