
திருச்சி, செப். 18-
சினிமாவில் இருந்து வந்த விஜய், மாற்று சக்தியாக வரவே முடியாது என்று எச்.ராஜா கூறினார்.
தமிழக பாஜக மூத்தத் தலைவர் எச்.ராஜா திருச்சியில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியது:
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி அமித்ஷாவை சந்தித்தபோது அவர் நல்ல விஷயங்கள் குறித்து பேசியிருக்கலாம். பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்திருக்கிறது. பிரச்சினைகள் விரைவில் தீர்க்கப்படும். அதிமுக உடைவதற்கு பாஜக காரணம் இல்லை. பாஜக அதுபோன்ற வேலை செய்வதில்லை.
அதிமுக உள்கட்சி விவகாரங்களால் தேஜ கூட்டணியின் ஸ்தரத்தன்மையில் பாதிப்பு ஏற்படாது. அதேவேளையில் மாற்றம் வர வேண்டும் என்று மக்கள் முடிவு எடுத்து விட்டால் யார் யாருடன் கூட்டணியில் இருக்கிறார்கள் என்று மக்கள் சிந்திக்க மாட்டார்கள். திமுக ஆட்சியை மாற்ற வேண்டுமானால் ஏற்கனவே ஆட்சியிலிருந்த அதிமுக - பாஜக கூட்டணி தான் சரியான மாற்று என மக்கள் நினைக்கின்றனர். இன்றைய அரசியல் சூழலில் யார் கூட்டணியில் இருக்கின்றனர்? யார் வெளியே செல்கின்றனர்? என்பது பற்றி மக்கள் கவலைப்பட மாட்டார்கள். எத்தனை முனை போட்டி வந்தாலும் திமுக அரசு தூக்கி எறியப்படும்.
விஜயகாந்த் புதிதாக கட்சியை தொடங்கி 2006 தேர்தலை சந்தித்து மாற்றம் கொண்டு வர முடிந்ததா? திடீரென சினிமாவில் இருந்து வந்த விஜய் ஏதோ பேசுகிறார் என்பதற்காக த.வெ.க. மாற்று சக்தியாக வர முடியாது. பாஜக கொள்கை எதிரி என்று கூறும் விஜய், தவெகவின் கொள்கை என்ன என்று சொல்லியிருக்கிறாரா? அவருடைய பேச்சு அர்த்தமற்ற வெறும் பேச்சுக்கள் தான்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?