விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு ஏன்? காவல்துறை விளக்கம்
Nov 22 2025
16
சேலத்தில் விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கான காரணம் குறித்து காவல்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
தவெக தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் 13-ம் தேதி திருச்சியிலிருந்து தனது தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கினார். ஆனால், எதிர்பாராத விதமாக செப்டம்பர் 27-ம் தேதி கரூரில் விஜய் பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலால் ஏற்பட்ட அசம்பாவிதத்தால் அவரது பிரச்சாரப் பயணத்தில் பிரேக் விழுந்தது. இந்த நிலையில் டிசம்பர் 4-ந் தேதி சேலத்திலிருந்து மீண்டும் தனது பிரச்சாரப் பயணத்தைத் தொடர ஆயத்தமானார் விஜய்.
இதைத் தொடர்ந்து த.வெ.க. தலைவர் விஜய் பிரசாரம் செய்ய அனுமதி கேட்டு நிர்வாகிகள் சார்பில் சேலம் போலீஸ் கமிஷனரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மனுவை நிராகரித்து சேலம் காவல்துறை த.வெ.க.வினருக்கு விளக்க கடிதம் அளித்துள்ளது.
அதில், டிசம்பர் 4-ந்தேதி வெளி மாவட்டங்களில் பாதுகாப்பு பணிக்காக செல்வதால் பாதுகாப்பு அளிப்பதில் சிரமம் ஏற்படும். விஜய் பிரசார நிகழ்ச்சியில் எவ்வளவு பேர் பங்கேற்பார்கள் என்ற தகவல் மனுவில் இல்லை. வெளி மாவட்டங்களில் இருந்து எத்தனை பேர் கலந்து கொள்வார்கள் என்ற தகவலும் இல்லை. குறைகளை நிவர்த்தி செய்து மனு அளித்தால் பரிசீலிக்கப்படும். அடுத்த முறை மனு அளிக்கும்போது 4 வாரங்களுக்கு முன்னர் மனு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?