ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் நடந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலானது.
ராயப்பேட்டை ஒயிட்ஸ் சாலையில் "எக்ஸ்பிரஸ் அவென்யூ வணிக வளாகம் அமைந்துள்ளது. இங்கு ஏற்கனவே கடந்த 2023ம் ஆண்டு இங்குள்ள உணவகத்தில் தீபிடித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது எக்ஸ்பிரஸ் மாலில் இருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டு தீ அணைக்கப்பட்டது.
கடந்த 2 மாதம் முன்பு, செப்டம்பர் மாதம் 23 ந்தேதி எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலின் 4வது ஸ்கிரீனில், லிப்ட் விபத்தில் என்ஜினியர் ராஜேஷ் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இந்த எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் உள்ள லிஃப்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. லிப்டில் மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டதால் பொதுமக்கள் பதறியடித்து ஓடினர். தீவிபத்து காரணமாக கடும் புகைமூட்டம் ஏற்பட்டதால் மாலுக்கு சென்றவர்கள் சிதறி ஓடினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுத்தனர். மாலில் இருந்த அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். மால் முழுவதும் சூழ்ந்துள்ள புகை மூட்டத்தை இயந்திரங்கள் மூலம் வெளியேற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மாலில் உள்ள 4 வழிகள் மூலமாகவும் புகையை வெளியேற்றப்படும் பணி நிறைவடைய 4 மணி நேரம் ஆகும் என கூறப்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் தேசம் அடைந்ததாக கூறப்படுகிறது. அதிர்ஷ்டவசமாக எந்த அசம்பாவிதமும் நடைபெறுவில்லை. இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெண் உதவியாளரிடம் பாலியல் அத்துமீறல்: ஓய்வு பெற்ற நீதிபதி மீது வழக்குப் பதிவு
சென்னை: பெண் உதவியாளரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக ஓய்வுபெற்ற நீதிபதி மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சென்னை செனாய் நகரில் 74 வயதுடைய ஓய்வுபெற்ற மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி ஒருவர் தனியாக வசிக்கிறார்.
முதுமை காரணமாக அவருக்கு தேவையான உதவிகளை உடனிருந்து கவனிக்கும் வகையில் மடிப்பாக்கத்தில் வசிக்கும் 43 வயதுடைய பெண் உதவியாளர் ஒருவர் பணியமர்த்தப்பட்டார். ஓய்வு பெற்ற நீதிபதியை அந்தப்பெண் உடனிருந்து கவனித்து வந்தார்.
கடந்த செப்டம்பர் மாதம் ஓய்வுபெற்ற நீதிபதி,அந்த பெண்ணை காரில் வெளியே அழைத்துச் சென்றுதேவையான உடை உள்ளிட்ட பொருட்களை வாங்கிக் கொடுத்துள்ளார். பின்னர், இருவரும் வீடுதிரும்பினர்.
இரவு நீண்ட நேரம் ஆகிவிட்டதால் பணிப் பெண்ணை அன்று இரவு தனது வீட்டிலேயே தங்கும்படி ஓய்வு நீதிபதி கேட்டுக்கொண்டார். அந்த பெண்ணும் அங்கேயே தங்கினார். நள்ளிரவில் அந்த பெண்ணிடம் ஓய்வு நீதிபதி தவறாக நடக்க முயன்றுள்ளார்.
அதிர்ச்சி, அடைந்த பெண், அவரது ஆசைக்கு இணைங்க மறுத்ததோடு வீட்டை விட்டு உடனடியாக வெளியேறி உள்ளார். மறுநாள் இது தொடர்பாக டி.பி சத்திரம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.
போலீஸார் இருவரையும் தனித்தனியாக அழைத்து விசாரித்தனர். இதில், ஓய்வு பெற்ற நீதிபதி, உதவியாளராக வந்த பெண்ணிடம் எல்லை மீற முயன்றது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் மீது 2 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
புகார் அளித்த பெண், ஏற்கெனவே சென்னையில் உள்ளதுணை ஆணையர் ஒருவர் மீதுபுகார் தெரிவித்து, அவர் இடமாற்றம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.