சென்னை, ஜன.
காமராஜர் பேத்தி உள்ளிட்ட பலர், விஜய் முன்னிலையில் த.வெ.க.வில் இணைந்தனர்.
த.வெ.க.வில் பல்வேறு கட்சியினர் இணைந்து வருகின்றனர். நேற்றும் பல்வேறு கட்சியை சேர்ந்தவர்கள் விஜய் முன்னிலையில் த.வெ.க.வில் இணைந்தனர்.
இதற்காக, த.வெ.க. தலைவர் விஜய் பகல் 1 மணியளவில் பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு வந்தார். அவரை கட்சி பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் வரவேற்றார்.
அதனைத்தொடர்ந்து, த.வெ.க.வில் இணைந்த பிரபலங்களுடன் விஜய் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார். த.வெ.க.வில் இணைந்தவர்கள் விவரம் வருமாறு:-
தஞ்சாவூர் மத்திய மாவட்ட தி.மு.க. வர்த்தகர் அணி அமைப்பாளர் சுந்தரபாண்டியன், ஒட்டன்சத்திரம் தி.மு.க. இளைஞர் அணி துணை அமைப்பாளர் கண்ணாயிரம், புதுச்சேரி முன்னாள் ஐ.ஜி. ராமச்சந்திரன்.
நடிகை ரஞ்சனா நாச்சியார், டைரக்டர் ஜெகதீச பாண்டியன், புதுச்சேரி அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. பெரியசாமி, திருவள்ளூர் அ.தி.மு.க. முன்னாள் நகர்மன்ற தலைவர் பாஸ்கரன் ஆகியோர் இணைந்தனர்.
சென்னை மாநகராட்சி 23-வது வார்டு கவுன்சிலர் ராஜனும் த.வெ.க.வில் இணைந்தார். இவருக்கு கடந்த உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கவில்லை. இதனால் சுயேச்சையாக போட்டியிட்டு அவர் வெற்றி பெற்றார். கவுன்சிலர் ஆன பிறகு காங்கிரஸ் ஆதரவு கவுன்சிலராக செயல்பட்டு வந்தார்.
பெருந்தலைவர் காமராஜரின் வம்சாவளி பேத்தி மயூரி கண்ணன், விஜய் முன்னிலையில் த.வெ.க.வில் இணைந்தார். இதற்கு முன்பு அவர் தி.மு.க.வில் இருந்தார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, ‘பொறுப்பை எதிர்பார்த்து விஜய் கட்சியில் சேரவில்லை. அவரது வெற்றிக்கு நான் துணை புரிவேன் என்றார்.
நடிகர் வேல.ராமமூர்த்தியின் மகனும் ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளருமான வி.ஆர்.ராஜ்மோகன், முன்னாள் மத்திய அமைச்சர் தலித் எழில்மலையின் மகள் கேத்ரின் உள்பட பல்வேறு தரப்பினரும் த.வெ.க.வில் இணைந்தனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?