விடுமுறை

விடுமுறை


இயந்திர வாழ்வின்

சலிப்பினைத்தவிர்த்து

இயற்கையை நேசித்து

ஆறுதல் அடைய

அளிக்கப்படும் அவகாசங்கள்!


ஆற்றும் வினைகள்

சரியா தவறா எனச்

சுயதணிக்கை செய்யும்

இனிய தருணங்கள்!


கடிவாளமின்றி

விரைந்தோடும்

காலக்குதிரையினை

கட்டிப்போட்டு

எதிர்காலச்சவாரிகளைச் சரித்திரமாக்கிட

வழங்கப்படும்

காலக்கொடைகள்!


கொண்டாட்டங்களில்

திளைப்பதற்கல்ல

சோர்வுக்கு விடைகொடுத்து

புத்துணர்ச்சியோடு

புதுமைகள் படைத்திட

தரப்படும் பொன்னானப்பொழுதுகள்!


வேகத்தடையில்லா

சாலைகள் விபத்துக்கு

வழிவகுக்கும்

விடுமுறையில்லாத

தொடரோட்டம்

மன உளைச்சலின்

விளைச்சலால்

பண்படாத தரிசாகும்!



கவிஞர் த.அனந்தராமன்

துறையூர்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%