
அறுசீர் மண்டிலம்.
அனைத்துக் கலைகள்
தருபவளே
ஆய கலைகள்
அளிப்பவளே!
இனிக்கும் கல்வி
கொடுப்பவளே
இனிய அறிவைப்
படைப்பவளே!
கனிவாய்த் திறமை
தருபவளே
கருணை தம்மை
அளிப்பவளே!
புனித ஆற்றல்
கொடுப்பவளே
பூக்கும் ஞானம்
படைப்பவளே!
தமிழைத் தகவாய்த்
தருபவளே
தண்மை யோடு
அளிப்பவளே!
கமழும் உணர்வைக்
கொடுப்பவளே
கல்விச் செல்வம்
படைப்பவளே!
இமயப் படைப்பைத்
தருபவளே
இனிய அமுதை
அளிப்பவளே!
எமையும் காத்தே
அருள்புரிவாய்
ஏற்ற கலையின்
அன்னாய்நீ!
*முனைவர்*
*இராம.வேதநாயகம்*
திருவண்ணாமலை.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%