
அறுசீர் மண்டிலம்.
உணவும் உடையும்
இருப்பிடமும்
உன்னத மாகக்
கிடைத்திடவே
மனதும் உடலும்
மகிழ்வாக
மாண்புடன் என்றும்
இருந்திடவே
கனிவும் கனவும்
நனவாக
காலமும் மகிழ்வை
அடைந்திடவே
மனித நேயம்
முதியோர்க்கு
மருத்துவ வசதி
வேண்டுமிங்கே!
உயிரைக் காக்க
வழிவகைகள்
உரியநல் வழியில்
கிடைத்திடவே
நயன்மைச் சொத்தில்
பராமரிப்பு
நலமுடன் என்றும்
அளித்திடவே
வயதே ஆன
முதியோர்க்கு
வளத்துடன் கிடைக்க
வேண்டுமிங்கே!
இயங்கும் முதியோர்
இல்லத்தில்
என்றுமே சேர்க்க
வேண்டாமே!
(வேறு)
நேரிசை வெண்பா!
முதியோரின்
இல்லம்
முடக்கிடுவோம்!
நல்ல
இதயம்
வளர்த்தே
இனிய...
உதயமாவோம்!
ஆணிவேரைக்
காப்போம்!
அழகாக
அன்பாகப்
பேணு
முதியோரைப்
பீடு!
*முனைவர்*
*இராம.வேதநாயகம்*
திருவண்ணாமலை.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?