விவசாயிகளுக்கு பயிர் உற்பத்தி ஊக்கத்தொகை பட்டுவாடா

விவசாயிகளுக்கு பயிர் உற்பத்தி ஊக்கத்தொகை பட்டுவாடா



புதுச்சேரி அமைச்சர் தகவல் புதுச்சேரி,அக்.18- 2098 விவசாயிகளுக்கு பயிர் உற்பத்தி ஊக்கத்தொகை பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது என்று புதுச்சேரி வேளாண் அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்துள்ளார். இது குறித்து அமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறையின் மூலமாக, பயிர்கள் சாகுபடியினை ஊக்குவிக்கவும், விவசாயி கள் பயிர் சாகுபடியில் முதலீடு செய்யும் இடுபொருட்கள் மற்றும் இதர பண்ணை செலவினங்களை சற்றே ஈடுகட்ட வும், பயிர் உற்பத்தி தொழில்நுட்ப திட்டத்தின் கீழ் பல்வேறு உட்பிரிவுகளில் விவசாயிகளுக்கு பயிர் உற்பத்தி ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகின்றது. அவ்வாறு வழங்கப்படும் ஊக்கத்தொகையில், கடந்த 2025 நவரைப் பருவத்தில் நெற்பயிர் சாகுபடி செய்த புதுச்சேரி பகுதியினைச் சார்ந்த 1770 பொதுப்பிரிவு விவ சாயிகளுக்கு ஒரு கோடியே முப்பத்தி ஒன்பது லட்சத்து எண்ப தாயிரத்து தொண்ணூற்று நாற்பது ரூபாய் (Rs.1,32,80,940/-) பயிர் உற்பத்தி ஊக்கத்தொகையும், அதே போன்று கடந்த 2025 ரபி பருவத்தில் எள் பயிர் சாகுபடி செய்த 328 பொதுப்பிரிவு விவசாயிகளுக்கு பயிர் உற்பத்தி ஊக்கத் தொகையாக இருபத்தி இரண்டு லட்சத்து இருபத்தி நான்காயிரத்து என்னூற்று ஐம்பது ரூபாயும் (Rs.22,24,850/-), அவர்களது ஆதார் எண் இணைக்கப்பட்ட வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது. கடந்த சட்டமன்றத் கூட்டதொடரில், மத்திய அரசின் வழி காட்டுதலின் படி, ஊக்கத்தொகை பெறும் எந்த பயனா ளிக்கும் அவர்களது ஆதார் எண் இணைக்கப்பட்ட வங்கி கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்படும் என அறிவிக்கப் பட்டது. அதனைத் தொடர்ந்து, கடந்த மாதம் வெளி யிடப்பட்ட ஒரு அறிக்கையில், ஆதார் சார்ந்த நேரடிப் பணப்பட்டுவாடாவிற்கான பூர்வாங்க தொழில்நுட்ப பணிகள் முடியும் தருவாயில் உள்ளது எனவும் கூடிய விரைவில் அமல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%