கன்னியாகுமரியில் முதன்முறையாக வடமுனை கடற்பறவைகள் கண்டுபிடிப்பு

கன்னியாகுமரியில் முதன்முறையாக வடமுனை கடற்பறவைகள் கண்டுபிடிப்பு



கன்னியாகுமரி, அக். 19- கன்னியாகுமரியில் உள்ள புத்தளம் உப்பளங்களில் இரண்டு வகையான கடற்பறவைகள் (டெர்ன்ஸ்) காணப்பட்டமை பறவை ஆர்வலர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. இக்கடற்பறவைகள் தமிழ்நாட்டில் முதல் முறையாகக் காணப்படுவதாகக் கூறப்படுகிறது. வடமுனை ஆலா (Sterna paradisaea) மற்றும் வெள்ளைக் கன்ன ஆலா (Sterna repressa) ஆகிய இப்பறவைகள் முறையே செப்டம்பர் 13 மற்றும் 14 ஆம் தேதிகளில் புத்தளம் உப்பளங்களில் காணப்பட்டன. பின்னர் பறவை ஆர்வலர்கள் தங்கள் கண்டுபிடிப்பை இபேர்டு (eBird) தளத்தில் பட்டியலிட்டனர். பறவை ஆராய்ச்சியாளர் ஆனந்த் ஷிபு வடமுனை ஆலா பறவையைக் கண்டறிந்தார். ஆர்க்டிக் மற்றும் அண்டார்டிக் பகுதிகளுக்கு இடையே ஆண்டுக்கு சுமார் 70,000 கி.மீ., விலங்கு ராஜ்ஜியத்தில் மிக நீண்ட வலசைப் போக்கிற்கு இப்பறவை பிரபலமானது. அடுத்த நாள், பறவையின் இருப்பைச் சரிபார்க்கும் வகையில், ஆனந்த் தனது சக பறவை ஆர்வலர் பாகவதி பாலசுப்ரமணியன் ஆகியோருடன் மீண்டும் அந்த இடத்திற்குச் சென்றபோது, இருவரும் ஒரு ஆச்சரியத்திற்கும் மகிழ்ச்சிக்கும் உள்ளானார்கள். இருவரும் வெள்ளைக் கன்ன ஆலா பறவையைக் கண்டனர். இதுதொடர்பாக ஆனந்த் ஷிபு கூறுங்கயில்,”நான் வடமுனை ஆலா பறவையை மாலை நேரத்தில் ஒரு மணி நேரம் கண்டேன், இருட்டிய பிறகு, நான் அந்த இடத்தை விட்டு வெளியேறினேன். அடுத்த நாள் மீண்டும் அப்பறவையைப் பார்க்கச் சென்றேன். இருப்பினும், நூற்றுக்கணக்கான பொது ஆலா மற்றும் கொண்டை ஆலாக்களுடன் அமர்ந்திருந்த ஒரு வெள்ளைக் கன்ன ஆலாவை நாங்கள் கண்டோம். இதுவரை நாட்டெங்கிலும் வடமுனை ஆலா பறவை காணப்பட்டது நான்கு முறை மட்டுமே. முதல் முறையாக இது 1990இல் லடாக்கில் காணப்பட்டது, 34 வருட இடைவெளிக்குப் பிறகு, கடந்த ஆண்டு மும்பை மற்றும் கேரளாவில் இது காணப்பட்டது. புத்தளத்தில் இப்பறவை காணப்பட்டது நாட்டில் ஐந்தாவது நிகழ்வாகும்” என வர கூறினார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%