எழுத்து வரிசைப்படி பிரித்துக் கொள்ளுங்கள் :
📚 முதலில் எழுத்து வரிசைப்படி பிரித்துக் கொள்ளுங்கள். அனைவரும் பெரும்பாலும் பயன்படுத்தும் சிறந்த மற்றும் பொதுவான முறை, புத்தகங்களை அதன் பெயரின் எழுத்துக்களின் அடிப்படையில் வரிசைப்படுத்துவது தான். இது புத்தக ஆசிரியரின் பெயர் அடிப்படையிலோ அல்லது புத்தகப் பெயரின் அடிப்படையிலோ செய்யலாம்.
பொருள் வாரியாக பிரித்தல் :
📚 பொருள் வாரியாக பிரித்தால் புத்தகங்களை அடுக்க மிகவும் சுலபமானது, அவற்றின் தலைப்புகள் வாரியாகப் பிரிப்பதும் நீங்கள் விருப்பப்படும் பொருள் அல்லது தலைப்புகளை எளிதில் கண்டறிந்து எடுத்துக் கொள்ள ஏதுவாக இருக்கும். நகைச்சுவை, பழம்பெரும் படைப்புகள், விறுவிறுப்பான தலைப்புகள் என தனித்தனியாக அலமாரியில் பிரித்து வைக்கலாம்.
நிறம் வாரியாக பிரித்தல் :
📚 நிறம் வாரியாக புத்தகங்களை அடுக்குவதன் மூலமாகவும் ஒரு அழகான புத்தக அலமாரியாக மாற்றி விடலாம். புத்தகத்தை பதிப்பகத்தின் அடிப்படையில் வரிசைப்படுத்துவதும் சுலபமான வழி. அலமாரியை பல பிரிவுகளாக்கி பதிப்பாளரின் அடிப்படையில் அவற்றை அடுக்கி குழப்பமில்லாமல் வரிசைப்படுத்தலாம்.
📚 உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் பரிசாக புத்தகங்களை அளித்திருந்தால், அவற்றிற்காக தனியாக இடம் வைத்து, அவற்றின் மீது பெயர் சீட்டுகளை ஒட்டி அடுக்கி வைக்கலாம். நீங்களே வாங்கிய புத்தகங்களை தனியாக பெயர் சீட்டுகளை இட்டு அடுக்கலாம்.
📚புத்தகங்களை எளிமையாக எடுப்பதற்கு ஒரே ஆசிரியர் எழுதிய புத்தகங்களை அடுத்தடுத்து அடுக்கி வைக்கலாம். இலக்கியம், ஆன்மிகம், வரலாறு, பொது அறிவு, சிறுகதைகள் போன்ற புத்தகங்களை தனித்தனியாக பிரித்து அலமாரியை அலங்கரிக்கலாம்.
📚 புதிய புத்தகத்தை அலமாரியில் வைப்பதற்கு முன்பே, பூச்சிகள் ஏதாவது இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும்.
📚 பூச்சிகள் இருந்தால் அவை புத்தகங்களை கடித்துச் சிதைத்துவிடும். இந்தப் பூச்சிகளை கட்டுக்குள் கொண்டு வர ஆயில் கலந்த கெமிக்கலை அலமாரியில் அடித்தால் போதும். பூச்சிகள் ஒழிந்துவிடும். அவசரத்துக்கு நாப்தலீன் உருண்டைகளைப் பயன்படுத்தலாம்.
Thanks and regards
A s Govinda rajan
Kodambakkam Chennai
600024
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?