" ரமேஷ் - ராணி இருவரும் அண்ணன் தங்கை . ராணிக்கு திருமணம் ஆகிவிட்டது . ரமேஷ் திருமணம் செய்து ஒரு குழந்தைக்கு தகப்பன் ஆனான் .
ரமேஷ் - ராணி இவர்களின் தாய் தந்தை இருவரும் இறந்து விட்டனர் .
ரமேஷ் மனைவி பூஜா. ரமேஷ் மகன் விஷால் பள்ளியில் படிக்கிறான் .
ராணிக்கு திருமணமாகி ஆறு ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை.
இதற்கிடையில் ராணியின் கணவர் கல்லீரல் பாதிப்பால் பாதிக்கப்பட்டு ஒரு மாத தீவிர சிகிச்சைக்கு பிறகு உயிரிழந்தார் . கையில் இருந்த பணம் எல்லாம் செலவாகி விட அன்னக்காவடி போல் ரமேஷ் வீட்டில் வந்து தஞ்சம் புகுந்தாள் .
பூஜாவின் கொடுங்கோல் ஆட்சி நடக்க தொடங்கியது . ராணி மனம் தளராமல் பூஜா வீட்டில் இருந்தாள் .
அருகாமையில் உள்ள ஒரு அங்கன்வாடியில் வேலையில் சேர்ந்தாள் . தன் கை செலவிற்கு பார்த்துக் கொண்டாள் ராணி .
சில ஆண்டுகள் கழித்து ரமேஷ் மனச்சுமையால் நோய்வாய் பட்டு இறந்து போனார் . பூஜா இன்னும் கோபம் அடைந்து ராணியை ஆட்டி வைத்தாள் .
விதவையான பிறகும் ஒரு விதவையின் வலியை உணர வில்லையே என்று மிகவும் வருந்தினாள் ராணி .
பூஜாவின் மகன் கல்லூரி செல்ல தொடங்கி விட்டான் . அங்கன்வாடி அமைப்பாளர் ராணியோடு வேலை செய்த ஆறுமுகம் ராணியை விரும்பினார் . தன் விருப்பத்தை ராணியிடம் நேரம் வரும் போது வெளிப்படுத்தினார் .
ராணி நன்கு யோசித்து பூஜாவின் நடவடிக்கை மாறாததால் திருமணத்திற்கு ஒப்புக் கொண்டாள் .
ஆறுமுகம் ராணி திருமணம் நடந்து ஒரு குழந்தை பிறந்தது . வசதி வாய்ப்பு கையிருப்பு கூடிப் போனது .
பூஜா கையில் பணம் இல்லாமல் விஷால் படிப்புக்கு பணம் கட்ட முடியாமல் தவித்தாள் .
ராணிக்கு செய்த துரோகம் தான் வாழ்வின் கஷ்ட்டத்துக்கு காரணம் என்பதை உணர்ந்தாள் . விதவையின் வலி என்ன என்பதையும் உணர்ந்தாள் .
உடன் தன் மகன் விஷாலை ராணியை சந்தித்து பேச அடிக்கடி அனுப்பி வைத்தாள் பூஜா.
விஷால் படிப்பை ராணி ஏற்றுக் கொண்டாள் . விஷால் அழைக்க ராணி பூஜா வீட்டிற்கு சென்றாள் .
பூஜா மனப்பூர்வமாக ராணியிடம் மன்னிப்பு கேட்டாள் . உறவு மீண்டும் மலர்ந்தது .
பூஜாவையும் விஷாலையும்
தன் வீட்டுக்கு அழைத்து வந்து விட்டாள் ராணி .
தன் அண்ணன் ரமேஷ் தன் மீது காட்டிய அக்கறையை ஆதரவாக எண்ணிய ராணி இப்போது அதே அக்கறையை தன் அண்ணன் மனைவி பூஜா மற்றும் அண்ணன் மகன் விஷால் மீது காட்டினாள்.
அன்பும் ஆதரவும் மட்டும் தான் மனித உலகின் வாழ்க்கை ரகசியங்கள் என்பது இப்போது பூஜாவிற்கு நன்றாக புரிய தொடங்கியது ..."
- சீர்காழி. ஆர். சீதாராமன்.